தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் கனமழைக்கு வாய்ப்பு - இந்திய வானிலை ஆய்வு மையம்

 
rain

தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  
 
ஆந்திர கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் இன்று மற்றும் நாளை ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் எனவும், இன்றைய தினம் தமிழ்நாட்டின் வட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதேபோல் நாளை தேதி தமிழகத்தின் நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, பெரம்பலூர் மாவட்டங்களில்  ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக  சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

rain

இதனிடையெ, தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்க கடல் பகுதிகளில் தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வருகிற மே 15ஆம் தேதி தென்மேற்கு பருவமழை  தொடங்க வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு மே 21 ஆம் தேதி தென்மேற்கு பருவமழை அந்தமானில் தொடங்கியது குறிப்பிடத்தக்கது