தமிழகத்தில் இன்று இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு

 
rain

வளி மண்டல மேலடுக்கு  சுழற்சி காரணமாக தமிழகத்தில் ஒரிரு இடங்களில் இன்று இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில்,  வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் மூன்று நாட்களுக்கு ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

rain

தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 டிகிரி செல்சியஸ் முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கக்கூடும் எனவும் வானிலை மையம் எச்சரித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு  மேகமூட்டத்துடன் காணப்படும்எனவும் நகரின் ஒருசில பகுதிகளில் இலேசான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் வரையும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டி  இருக்கக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் அதிகபட்சமாக திருச்சி மாவட்டம் அணைக்கட்டு மற்றும் நாமக்கல் மாவட்டம் மோகனூர் பகுதியில் தலா  6 செண்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.