முதல்வரின் கோரிக்கை ஏற்ற மத்திய அரசு - மியான்மரில் சிக்கிய தமிழர்கள் தாயகம் வருகை!

 
stalin stalin

மியான்மரில் சிக்கி தவித்த 13 தமிழர்கள் தமிழக அரசின் நடவடிக்கையின் பேரில் தற்போது  மீட்கப்பட்டு தாயகம் திரும்புகிறார்கள்.

mkstalin

மியான்மர் நாட்டில் சிக்கித் தவிக்கும் 50 தமிழர்கள் உட்பட சுமார் 300 இந்தியர்களை விடுவித்து தாய்நாட்டிற்கு அழைத்து வர தேவையான நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வலியுறுத்தி இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த மாதம் 21ஆம் தேதி  கடிதம் எழுதி இருந்தார். அதில் , மியான்மர் நாட்டில் சுமார் 50 தமிழர்கள் உட்பட சுமார் 300 இந்தியர்கள் கடுமையான இன்னல்களுக்கு ஆட்பட்டிருப்பதாக மாநில அரசுக்கு தகவல் கிடைத்துள்ளது. ஆரம்பத்தில் தனியார் ஆட்சேர்ப்பு முகமைகள் மூலம் தகவல் தொழில்நுட்பம் தொடர்பான வேலைகளுக்காக தாய்லாந்து நாட்டிற்குச் சென்றதாகத் தெரிய வந்துள்ளது. ஆன்லைனில் சட்டவிரோத வேலைகளை மேற்கொள்ளும் பொருட்டு அவர்கள் தாய்லாந்தில் இருந்து மியான்மருக்கு கட்டாயப்படுத்தி அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர் . அத்தகைய சட்டவிரோத வேலைகளை செய்ய மறுத்ததால் வேலையளிப்போரால் கடுமையாகத் தாக்கப்படுகிறார்கள் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. எனவே அவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருந்தார்.

stalin modi
 

இந்நிலையில் தாய்லாந்துக்கு வேலைக்காக சென்று மியான்மரில் சிக்கி தவித்த 13 தமிழர்களையும் தமிழ்நாடு அரசு மீட்டுள்ளது .முதலமைச்சர் மு .க. ஸ்டாலினின் கோரிக்கையை ஏற்று இந்திய வெளியுறவு அமைச்சகம் மீட்பு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இதன் மூலம் தாய்லாந்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு மியான்மர் சிக்கி தவித்த தமிழ் 13 தமிழர்கள் விமான மூலம் தாயகத்திற்கு புறப்பட்டுள்ளனர்.  மியான்மரில் சிக்கித் தவித்த தமிழர்களின் மீட்க பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்த நிலையில் தற்போது 13 தமிழர்களும் வைக்கப்பட்டுள்ளனர்.