நாளை வாக்கு எண்ணிக்கை - டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு!!

 
Tasmac Tasmac

நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நிலையில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. 

tasmac

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி கடந்த  பிப்ரவரி 17ஆம் தேதி முதல் 19ம் தேதி வரை டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பு வெளியான உடனே பலர் சரக்குகளை வாங்கி அடுக்க ஆரம்பித்து விட்டனர். அத்துடன் அதிக விலைக்கு பிளாக்கில் வாங்கவும் செய்தனர். தேர்தல் பொதுவிடுமுறையையொட்டி 3 நாட்கள் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாமலே இருந்தது. இதனால் தேர்தல் களத்தில் சண்டை, சர்ச்சைகள் இன்றி சற்று சுமூகமாகவே நடந்து முடிந்தது என்று கூட சொல்லலாம். அத்துடன்  வாக்கு எண்ணிக்கை நாளான நாளையும்  டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Tasmac

இந்நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை நடைபெறும் நிலையில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் பகுதி மற்றும் அதன் 5 கிலோ மீட்டர் சுற்றளவில், மதுக்கூடம் மற்றும் மதுபானக் கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. அரசு உத்தரவை மீறி சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்வது தெரியவரும் பட்சத்தில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை  விடுக்கப்பட்டுள்ளது.