மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு இன்று டாஸ்மாக் கடைகள் மூடல்..

 
டாஸ்மாக்


மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு இன்று சென்னை , நாமக்கல் உள்ளிட்ட  பல்வேறு மாவட்டங்களில்  டாஸ்மாக் கடைகளுக்கு   விடுமுறை விடப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு  இன்று  ( ஏப்ரல் 14-ம் தேதி ) மதுபானங்கள் விற்பனை செய்ய தடை விதிக்கப்படுவதாக  தமிழக அரசு தெரிவித்துள்ளது.  தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை விதிகளின்கீழ் அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் அதனை சார்ந்த மதுக்கூடங்கள் ஆகியவை திறக்கப்படக்கூடாது  என உத்தரவிடப்பட்டுள்ளது.

டாஸ்மாக்

அதேபோல்   எப்எல் 2 உரிமம் கொண்ட கிளப்புகளைச் சார்ந்த மதுக்கூடங்கள் ,  எப்எல் 3 உரிமம் கொண்ட ஓட்டல்களைச் சார்ந்த மதுக்கூடங்கள் மற்றும் எப்எல் 3-ஏ, எப்எல் 3-ஏஏ மற்றும் எப்எல் 11 உரிமம் கொண்ட மதுக்கூடங்கள் அனைத்தும் கண்டிப்பாக மூடப்பட்டிருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

டாஸ்மாக் வாடிக்கையாளர்கள் இனி நிம்மதியா சரக்கடிக்கலாம்?!..

 அரசின் உத்தரவை மீறி டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டாளோ,  மது பானம் விற்பனை செய்யப்பட்டாளோ,  மதுபான விதிமுறைகளின்படி சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழகம் முழுவதும் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவு பிறப்பித்திருக்கின்றனர்.  இந்த உத்தரவின் பேரில் இன்று சென்னை, நாமக்கல் உள்பட  தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டுள்ளன..