வரி ஏய்ப்பு புகார்.. தமிழகம் முழுவதும் 30 இடங்களில் ஐடி ரெய்டு..

 
RAID TTN RAID TTN

சென்னையில் 10 இடங்கள் உள்பட, தமிழ்நாடு முழுவதும் 30 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.  

வருமான வரியை முறையாக கட்டாமல், வரி ஏய்ப்பு செய்பவர்களுக்குச் சொந்தமான இடங்களில்  வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொள்வர்.  இந்த சோதனையின் போது வருமானத்திற்கு அதிகமான, கணக்கில் காட்டப்படாத  சொத்துக்கள், அது தொடர்பான ஆவணங்கள் இருந்தால் அவற்றை கைப்பற்றி நடவடிக்கை எடுப்பர். தமிழகத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கூட பிரபல நடிகர்கள், தயாரிப்பாளர்கள் மற்றும் தொழிலதிபர்களுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது.

Raid

இந்நிலையில் ஐதராபாத்தைச் சேர்ந்த நிறுவனம் ஒன்றிற்கு தொடர்புடையதாக  கருதப்படும், தமிழகம் முழுவதும் உள்ள 30க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.   தொழில் அதிபரிகளின் வீடுகள் மற்றும் நிறுவனங்கள் என  சென்னையில் மட்டும்  10 இடங்களிலும் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் 20 இடங்களிலும் சோதனை நடைபெற்று வருகிறது. இன்று அதிகாலை முதல் சோதனை  நடைபெற்று வரும் நிலையில்,    முறையான கணக்குகள் மற்றும் வரி ஏய்ப்பு சந்தேகங்களின் அடிப்படையில் சோதனை நடைபெற்று வருவதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது. . வருமான வரித்துறை சோதனை நடைபெறுவதையொட்டி காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.