இன்றும் ஜவுளி கடைகள் கடையடைப்பு போராட்டம்!!

 
Yarn

நூல் விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் பின்னலாடை நிறுவனங்கள் 2வது நாளாக வேலைநிறுத்தம் செய்து வருகின்றனர்.

ytn

நூல் விலை உயர்வை கண்டித்து ஈரோடு கிளாக் மெர்சண்ட்ஸ்  அசோசியேசன் சார்பில் ஜவுளி உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் ஜவுளி கடைகள் இன்றும், நாளையும்  2 நாட்கள் கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்தனர். அதன்படி நேற்று ஜவுளி கடை அடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது. கொரோனா ஊடரங்கு காலத்தில் பின்னலாடைத் தொழில் முடங்கிப்போன நிலையில் நூல் விலை உயர்வு மேலும் பாதிப்படைய செய்துள்ளது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு நூல் விலை அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு 50 சதவீதம் அளவிற்கு உயர்ந்து கிலோ ரூ. 360 முதல் ரூ 400  வரை  அதிகரித்தது.  இந்த ஆண்டும்  நூல் தரம் வாரியாக  ரூ 400 முதல் ரூ. 470 ரூபாய் வரை விற்பனையாகி வருகிறது. 

textile

இந்நிலையில்  ஈரோடு, திருப்பூர், நாமக்கல், ஈரோடு, கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் நூல் விலை உயர்வை கண்டித்து  இன்றும் ஜவுளி வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.  இந்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து 25 சங்கங்கள் கடையடைப்பு போராட்டத்தில் பங்கேற்றுள்ளது.   இதன் மூலம் ஜவுளி சந்தையில் 280 தினசரி கடைகளும், 780 வாரசந்தை கடைகளும், அசோகபுரத்தில் 2,000  கடைகளும், டிவிஎஸ் வீதியில் 150 கடைகளும், சென்ட்ரல் தியேட்டர் சந்தையில் 1500 கடைகளும் இயக்கவில்லை. சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஜவுளி வர்த்தகம்  மற்றும் உற்பத்தி நிறுவனங்கள் போராட்டத்தில் ஈடுபடும் நிலையில், சுமார்  ரூ.2000 கோடி வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.