'சென்னையில் மிக நீளமான மேம்பாலம்' - முதல்வர் திறந்து வைத்தார்!!

 
tn

செங்கல்பட்டு, மேடவாக்கம் பகுதியில் தாம்பரம் - வேளச்சேரி மேம்பாலத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

tn

இந்நிலையில் வேளச்சேரி - தாம்பரம் இடையே மேடவாக்கம் பகுதியில் 2.03 கி.மீ நீளம் 11 மீ அகலம் கொண்ட மேம்பாலத்தை  பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.  நெடுஞ்சாலைத் துறையின் சார்பில் ரூ. 95.21 கோடி மதிப்பீட்டில் மேம்பாலம் கட்டப்பட்டுள்ள நிலையில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக மேம்பாலம் திறந்து வைக்கப்பட்டது.   இந்த புதிய பாலத்திற்கு மறைமலை அடிகளார் பாலம் என பெயரிடப்பட்டுள்ளது. சென்னையில் மிக நீளமான மேம்பாலமாம் இது என்பதால்  போக்குவரத்து நெரிசல் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தாம்பரம் முதல் வேளச்சேரி  வரையிலான சாலை போக்குவரத்திற்கு இதன் மூலம் விடிவு காலம் பிறக்கும் என்று நம்பப்படுகிறது. நாள்தோறும் இந்த சாலை பகுதியில் சுமாராக ஒன்றரை லட்சம் வாகன ஓட்டிகள் கடந்து செல்வதாக புள்ளி விவரங்கள் சொல்கிறது . இந்த பாலம் திறக்கப்பட்டு இருப்பதன் மூலம் தாம்பரத்திலிருந்து வேளச்சேரி வருவோர் எந்த தாமதமும் இல்லாமல் சில மணி நேரங்களில் சாலையை கடந்து பயனடைவார்கள். 

tn

வேளச்சேரி தாம்பரம் தடத்தில் மேடவாக்கம் சோழிங்கநல்லூர் சாலை சந்திப்பு மற்றும் மேடவாக்கம் மாம்பாக்கம் சாலை சந்திப்புகளை இணைத்து 1.6 கிலோ மீட்டர் தூரத்தில் மேம்பால பணிகள் முடிக்கப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.  இந்த பாலம் திறக்கப்பட்டுள்ளதால் மேடவாக்கம் பகுதியில் போக்குவரத்து நெரிசல் குறைவதோடு பள்ளிக்கு செல்லும் மாணவர்கள், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பயண நேரம் குறையும்.  தாம்பரம், வேளச்சேரி, துரைப்பாக்கம் ,பள்ளிக்கரணை, கிழக்கு கடற்கரை சாலை ,தகவல்தொடர்பு சாலை, தரமணி, அடையாறு, மேடவாக்கம் ,சோழிங்கநல்லூர் மற்றும் மடிப்பாக்கம் பகுதிகளுக்கு செல்லும் மக்களுக்கும் இப்பாலம் பயனுள்ளதாக அமையும்.  பாலம் கட்டும் பணி கடந்த 2015ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.  ஆனால் ஓராண்டுக்கு மேலாக பாலம் அமைக்கும் பணி பாதியில் நிறுத்தப்பட்டிருந்தது. 2018 ஆம் ஆண்டு  மீண்டும் டெண்டர் விடப்பட்டு புதிய ஒப்பந்ததாரருக்கு பணி ஒதுக்கப்பட்டது.  இதன் மூலம் 3 ஆண்டுகளுக்கு பிறகு மேம்பாலம் இன்று திறக்கப்பட்டுள்ளது.