"கள்ளக்குறிச்சி கலவரம் திட்டமிட்ட வன்முறை" - சென்னை உயர்நீதிமன்றம்

 
high court

கள்ளக்குறிச்சி வன்முறையின் பின்னணியில் இருப்பவர்கள் யார்? என்பதை கண்டுபிடிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூரிலுள்ள சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்த மாணவி ஸ்ரீமதி உயிரிழந்தார்.  இவரது உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாககூறி அவரது உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் மாணவியின்  உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் நேற்று வன்முறையாக வெடித்தது. பள்ளிமீது தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில் பள்ளி வாகனங்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் வருகிற 31ஆம் தேதி வரை 144தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கள்ளக்குறிச்சி மாணவியின் தந்தை ராமலிங்கம் தொடர்ந்த வழக்கு  சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி, நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து விட்டு போராட்டத்தில் ஈடுபட்டது ஏன்? போராட்டம் நடத்த அனுமதித்தது யார்? வன்முறையை தூண்டிவிட்டது யார்?மாணவியின் இறப்புக்கு என்ன காரணம்? என்ன என்று அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்தார். 

tn

வன்முறையின் பின்னணியில் இருப்பவர்கள் யார் என்பதை சிறப்புப் படை அமைத்து கண்டுபிடிக்க வேண்டும் . வன்முறை சம்பவத்தை பொறுத்தவரை விசாரணையை நீதிமன்றம் கண்காணிக்கும். ஆனால்  4500 மாணவர்களின் நிலை என்ன?, சான்றிதழ்கள் எரிக்கப்பட்டுள்ளன; திடீர் கோபத்தில் வெடித்த வன்முறையல்ல: திட்டமிட்டு நடத்தப்பட்டது போல் தெரிகிறது. எனவே பள்ளியில் வன்முறையில் ஈடுப்பட்டோரை தனிப்படை வைத்து அடையாளம் காணுங்கள் என்றார்.

tn

இதனிடையே மறு பிரேத பரிசோதனை செய்ய வேண்டும். தகுதியில்லாத மருத்துவர்கள் கொண்டு நடத்தப்பட்டது என்று மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்ட நிலையில் , தகுதியில்லாத மருத்துவர்கள் என எப்படி சொல்லலாம், நீங்கள் நிபுணரா எனவும்  நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. வன்முறை சம்பவம் குறித்து சிறப்புப்படை அமைத்து விசாரித்து சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். வருங்காலத்தில் கல்வி நிறுவனங்களில் இறப்புகள் நிகழும் போதெல்லாம், CBCID மூலம் விசாரணை நடத்தப்பட வேண்டும். 3 மருத்துவர்கள் கொண்ட குழுவால் பிரேதப் பரிசோதனை நடத்தப்பட வேண்டும்  என்றும் சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.