"முதலமைச்சர் அரசியல் பேசவில்லை ; அண்ணாமலை தான் அரசியல் செய்கிறார்" - துரை வைகோ

 
durai

தமிழ்நாடு பாஜக தலைவர் தான் அரசியல்  செய்கிறார் என்று துரை வைகோ என்று விமர்சித்துள்ளார்.

சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் 31 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மதிப்பிலான உட்கட்டமைப்புத் திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொடங்கி வைத்தார். விழா மேடையில் பிரதமர் மோடிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் வைத்த 5 கோரிக்கைகள் வைத்தார்.

durai vaiko

இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த மதிமுக தலைமை கழக செயலாளர் துரை  வைகோ, " நேற்று முதலமைச்சர் அரசியல் பேசவில்லை தமிழர்களுக்கு தேவையான கோரிக்கையை  பேசி இருக்கிறார்; தமிழ்நாடு பாஜக தலைவர் தான் அரசியல்  செய்கிறார். கடந்த முறை நீட் தேர்வு உள்ளிட்ட பல பிரச்னைகள் இருந்ததது. அதனால்தான் பிரதமர் வரும்போது  கருப்பு பலூன் பறக்க விட்டோம்; இம்முறை தமிழ்நாட்டிற்கான திட்டங்களை தொடங்கி வைக்க வந்ததால் பிரதமரை வரவேற்கிறோம் என்றார்.

tn

தொடர்ந்து பேசிய அவர், தேசிய கல்விக் கொள்கையில் அமித்ஷா ஆங்கிலத்துக்கு பதிலாக இந்தி என தெரிவித்திருந்தார். இந்த தேசிய கல்விக் கொள்கைகளும் அதேதான் கூறியிருக்கிறது. தேசிய கல்வி கொள்கை செயல்பட்டால் ஒன்று மாநில மொழி இருக்கும் மற்றொன்று ஆங்கிலம் இல்லாமல் ஹிந்தி மொழியாக இருக்கும் சட்டம்-ஒழுங்கு பொறுத்தவரை சிறப்பான, சரியான முறையில் முதலமைச்சரும், சைலேந்திரபாபுவும் செயல்படுகின்றனர்" என்றார்.