அடுத்த ஆண்டு சென்னையில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு - சட்டப்பேரவையில் முதல்வர் அறிவிப்பு

 
tn

பள்ளிவாசலுக்கு வழங்கப்பட்டு வரும் மானிய தொகை ₹5 கோடியில் இருந்து ₹10 கோடியாக உயர்த்தப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

நடப்பாண்டுக்கான  சட்டப்பேரவை கூட்ட தொடரின் இறுதி நாளான இன்று முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பதிலுரை வழங்கினார்.

அப்போது பேசிய முதல்வர் ஸ்டாலின், "முதல்வரின் கிராமசாலைகள் மேம்பட்டு திட்டத்தை அறிமுகப்படுத்துகிறேன். முதல் கட்டமாக இரண்டு ஆண்டுகளில் 10ஆயிரம் கிலோமீட்டர் சாலைகள் ரூபாய் 4000 கோடியில் சீரமைக்கப்படும்.

  •  காலை சிற்றுண்டி திட்டம் 2023- 24 ஆம் ஆண்டில் அனைத்து  அரசு பள்ளிகளுக்கும் விரிவாக்கம் செய்யப்படும்.
  • உலக முதலீட்டாளர்கள் மாநாடு அடுத்த ஆண்டு ஜனவரி 10, 11 ஆம் தேதிகளில் சென்னையில் நடத்தப்படும்.
  • 2030க்குள் ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதார இலக்கை அடைவதை நோக்கம். இளைஞர்களின் நலன் பெண்களின் திறன் மேம்பாடு ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் அளித்து வருகிறோம். முடித்தே தீருவோம் என்பதை வெற்றிக்கான இலக்கு மக்களுக்காக இருக்கிறேன். அதற்காக உண்மையாக உழைக்கிறேன்.
  • கடந்த ஒன்றரை  ஆண்டுகளில் 1.5 லட்சம் மின் இணைப்புகள் வழங்கப்பட்டது.

tn

  •  மூன்று லட்சத்திற்கு அதிகமானவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்க வழி வகை செய்யப்பட்டுள்ளது.
  •  மக்களுக்கு நேரடியாக வழங்கப்பட்ட நலத்திட்ட உதவிகள் மூலம் ஒரு கோடியே  மூன்று லட்சத்திற்கு மேல் பயனடைந்துள்ளனர்.
  •  240 புதிய நிறுவனங்கள் தொடங்க புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது
  • அரசின் அறிவிப்புகளில் 2892 அறிவிப்புகளுக்கு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 
  • தொழில் தொடங்க சிறந்த மாநிலங்கள் பட்டியலில் 14வது இடத்தில் இருந்து மூன்றாவது இடத்திற்கு தமிழ்நாடு முன்னேறியுள்ளது .
  • இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தமிழ்நாட்டின் பங்கு 9. 22 சதவீதமாகும்

tn

  • கடும் நிதி நெருக்கடி இருந்த போதிலும் திறமையான நிர்வாகத்தால் கடனை குறைத்துள்ளோம். முந்தைய ஆண்டை காட்டிலும் நான்காயிரம் கோடி குறைவாக கடன் வாங்கியுள்ளோம்.
  • வட மாநில தொழிலாளர்களின் தகவல்களை காவல்துறை சேகரித்து வருகிறது. சட்ட விரோத செயல்களில் ஈடுபடும் வட மாநிலத்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
  •  தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் தமிழ் மொழி கற்பிக்கப்படுவது கண்காணிக்கப்படும்.
  •  மருத்துவ படிப்பிற்காக 5 பன்னாட்டு நூல்கள் தமிழில் மொழிபெயர்த்து வெளியிடப்பட்டுள்ளன 
  • நமக்கு நாமே திட்டம் பேரூராட்சி நகராட்சிகளிலும் செயல்படுத்தப்படும்
  • 233 சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் தொகுதி தொடர்பாக கோரிக்கை மனு அளித்துள்ளனர். ஒருவர் மட்டும் அளிக்கவில்லை.

tn

  •  கடந்த அதிமுக ஆட்சி 2020- 21ல் பெறப்பட்ட நிகர கடன் ரூபாய் 83 ஆயிரம் கோடி தற்போது 2021-22 திமுக ஆட்சியில் பெற்ற கடன் 79 ஆயிரம் கோடியாக குறைந்துள்ளது. 
  •  ஆன்லைன் ரம்மி தடை மசோதா ஆளுநரிடம் நிலுவையில் உள்ளது
  •  நீட் விலக்கு மசோதா குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது
  • தமிழ்நாடு தொடர்ந்து அமைதி பூங்காவாக திகழ்கிறது .அதனால் தான் முதலீட்டாளர்கள் தேடி வருகிறார்கள். தமிழ்நாட்டில் மத இன தீவிரவாத சக்திகளை அரசு வளர விடாது.
  • நாங்கள் மதவாதத்திற்கு எதிரானவர்களே தவிர மதத்திற்கு எதிரானவர்கள் அல்ல. நாங்கள் நாத்திகர்கள் என்பதால் கோயில்களை சீரமைக்கவில்லை என வதந்தி பரப்புகிறார்கள்.
  • தமிழ்நாட்டில் பள்ளிவாசலுக்கு வழங்கப்படும் மாநிலத் தொகை 6 கோடியில் இருந்து பத்து கோடியாக உயர்த்தப்படும் " என்றார்.