அதிமுக அலுவலகத்திற்கு செல்ல விதித்த தடை இன்றுடன் நிறைவு!

 
admk

அதிமுக தலைமை அலுவலகத்திற்கு செல்ல விதித்த தடை இன்றுடன் நிறைவடைந்துள்ளது.

admk office

கடந்த ஜூலை மாதம் 11ஆம் தேதி அதிமுக அலுவலகத்தில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களிடையே மோதல் ஏற்பட்டது.  இதையடுத்து அசம்பாவிதங்களை தடுக்கும் வகையில் வருவாய் துறையினர் அதிமுக அலுவலகத்திற்கு சீல் வைத்தனர்.  இது தொடர்பான வழக்குகளை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் அதிமுக தலைமை அலுவலகத்தின் சாவியை எடப்பாடி பழனிசாமியிடம் ஒப்படைக்க உத்தரவிட்டது. அத்துடன் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் ஒரு மாத காலத்திற்கு அலுவலகத்திற்கு செல்ல வேண்டாம் என்றும் உத்தரவு பிறப்பித்தது.

court

இந்நிலையில் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு செல்ல உயர் நீதிமன்றம் விதித்திருந்த தடை இன்றுடன் நிறைவு பெற்றுள்ளது. அதிமுக அலுவலகசாமியை எடப்பாடி பழனிசாமியிடம் ஒப்படைக்கும் உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக ஓபிஎஸ் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த மனு மீதான விசாரணை நேற்று நடைபெற்றது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா  அமர்வு, விரிவான விசாரணை மேற்கொள்ளாமல் எந்த இடைக்கால உத்தரவையும் பிறப்பிக்க முடியாது எனவும், வழக்கை ஒரு வாரத்திற்கு பிறகு விசாரிப்பதாகவும் கூறி உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.