கல்லூரி மாணவியை அடித்துக்கொன்ற காதலன்.. காரைக்குடியில் பரபரப்பு..

 
murder

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே காதல் தகராறில்,  கல்லூரி மாணவி அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள மாத்தூரைச் சேர்ந்த கூலித்  தொழிலாளி செல்வராஜ்.   இவரது மகள் சினேகா. இவர்  காரைக்குடியில் உள்ள அரசு கலைக் கல்லூரியில் 3ம் ஆண்டு கணிதம் படித்து வந்துள்ளார். சினேகாவு,   இலுப்பக்குடி  கிராமத்தைச் சேர்ந்த கட்டிட தொழிலாளி கண்ணன் என்பவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. கடந்த ஒரு மாதத்திற்கு முன்னதாக சினேகாவை திருமணம் செய்து வைக்கக் கோரி,  கண்ணன் அவரது வீட்டிற்கு சென்று பெண் கேட்டுள்ளார். இதனால் சினேகாவின் பெற்றோருக்கும், கண்ணனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது.  இதில் சினேகாவின் தாத்தாவை கண்ணன் கீழே தள்ளி விட்டதில் அவர் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது.

 கல்லூரி மாணவியை கம்பியால் தாக்கிய  காதலன்..

இதுகுறித்து புகார் அளிக்கப்பட்டதன் பேரில்,  சாக்கோட்டை காவல் துறையினர் கண்ணனை அழைத்து எச்சரித்து அனுப்பியுள்ளனர்.  இந்த சம்பவத்திற்கு பின்னர் சினேகாவுக்கும் கண்ணனுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு, அவர்களது காதலிலும் விரிசல்  ஏற்பட்டது. இந்நிலையில் நேற்று சினேகாவிடம், தான் கொடுத்து வைத்திருந்த பாஸ்போர்ட் மற்றும் சான்றிதழ்களை திருப்பித் தருமாறு  கண்ணன் செல்போனில் கேட்டுள்ளார்.   அதன் பெயரில் அவரது பாஸ்போர்ட்  மற்றும் சான்றிதழ்களை எடுத்துக்கொண்டு சினேகா இருசக்கர வாகனத்தில் மாத்தூர் ரேஷன் கடை அருகே வந்துள்ளார்.

கல்லூரி மாணவியை அடித்துக்கொன்ற காதலன்.. காரைக்குடியில் பரபரப்பு..

அங்கு  இருவருக்கும் இடையே மீண்டும்  தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரம் அடைந்த கண்ணன், தனது இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த இரும்பு கம்பியால் சினேகாவின் தலையில் ஓங்கி அடித்துள்ளார். இதில் படுகாயம் அடைந்த சினேகா ரத்த வெள்ளத்தில் சரிந்து துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.  சினேகாவின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வரவே,  கண்ணன் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.   தவகலின்பேரில்  நிகழ்வு இடத்திற்கு வந்த போலீசார் சினேகாவின்  உடலை கைப்பற்றிய பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து,  தப்பியோடிய கண்ணனை தேடி  வருகின்றனர்.