மற்ற மாநிலங்களுக்கு அள்ளிக் கொடுத்துட்டு, தமிழகத்தை மட்டும் வஞ்சிக்கும் மத்திய அரசு..

 
மத்திய அரசு

விளையாட்டுக்கான உள்கட்டமைப்பை மேம்படுத்தும் திட்டங்களுக்கு பாஜக ஆளும் மாநிலங்களுக்கு அதிகளவிலும்,   தமிழ்நாட்டுக்கு  குறைவாகவும் மத்திய பாஜக அரசு நிதி ஒதுக்கீடு செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

நாடாளுமன்றம்

விளையாட்டை  ஊக்கப்படுத்தவும்,  அத்துறையை விரிவுபடுத்தவும்  மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டது என்று மக்களவை  கேள்வி எழுப்பப்பட்டது.  அதற்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர்  அழுத்துப்பூர்வமாக பதில் அளித்தார்.  அதில் Khelo India எனப்படும் விளையாட்டு திட்டத்தின் கீழ்  அதிகபட்சமா குஜராத்திற்கு 608 கோடி ரூபாயும், உத்தரப்பிரதேசத்திற்கு   ரூ.503 கோடியும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.  அதற்கு  அடுத்தபடியாக  அருணாச்சல பிரதேசத்துக்கு ரூ.183 கோடி, கர்நாடகாவிற்கு ரூ.128 கோடி, ராஜஸ்தானுக்கு ரூ.112 கோடி, மகாராஷ்டிராவுக்கு ரூ.110 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது.  

 மோடி

ஆனால் தமிழ்நாட்டிற்கு வெறும் 33 கோடி ரூபாய் மட்டுமே  மத்திய அரசு  ஒதுக்கீடு செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது ஆந்திரா, அசாம், பீகார், டெல்லி, அரியானா, கேரளா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை விட தமிழ்நாட்டுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதியானது மிக்ககுறைவாகும்.  அதேபோல் அங்கீகாரம் பெற்ற பயிற்சியாளர்களின் எண்ணிக்கையை பொறுத்தவரையிலும்  டெல்லியில் 121 பேரும், அசாமில் 56 பேரும் உள்ளனர்.  ஆனால்  தமிழ்நாட்டில் வெறும் 18 பயிற்சியாளர்கள் மட்டுமே பணியமர்த்தப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.