வரும் 15ஆம் தேதி முதல் மீன்பிடி தடைக்காலம் ஆரம்பம்!!

 
tn

மீன்பிடி தடைக்காலம் வருகிற 15-ஆம் தேதி முதல் தொடங்கும் என்று மீன்வளத் துறை அறிவித்துள்ளது.

கடல் மீன் வளத்தை பாதுகாக்கும் வகையில் புதுச்சேரி, தமிழகம் கிழக்கு கடற்கரை நெடுகிலும் உள்ள பகுதி முழுவதிலும்,  திருவள்ளூர் மாவட்டம் முதல் கன்னியாகுமரி நகரம் வரை ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் முதல் ஜூன் மாதம் வரை 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

tn

இந்நிலையில் வருகிற 15-ஆம் தேதி முதல் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மீன்பிடி தடை காலம் தொடங்குகிறது . ஜூன் 14ஆம் தேதி முடிய 61நாட்களுக்கு மீன்பிடி விசைப் படகுகள் மற்றும் இழுவை படகுகள் மூலம் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மீனவர்கள் கடலில் மீன் பிடிப்பதை நிறுத்தி வைப்பதன் மூலம் இடையூறு இல்லாத இனவிருத்தி மேம்பாட்டு மீன் வளம் பெருக வாய்ப்புள்ளது என்று தமிழக அரசு தனது ஆணையில்  குறிப்பிட்டுள்ளது.  அதன்படி 61நாட்கள் முடியும் வரை அனைத்து மாவட்ட மீனவர்கள் மீன்பிடி விசைப் படகுகள் மற்றும் இழுவை படகுகள் மூலம் மீன்பிடிக்க வேண்டாம் என அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

tn

அதேசமயம் மீன்பிடி தடை காலத்தில் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் நிலையில் அவர்களுக்கு மீன்பிடி தடை காலம் நிவாரணம் வழங்கப்பட உள்ளது.  கடந்த 2021ஆம் ஆண்டு 1.72 லட்சம் கடல் மீனவ குடும்பங்களுக்கு மீன்பிடி தடைக்கால நிவாரண தொகையாக தலா 5 ஆயிரம் வீதம் வழங்கப்பட்டது. இதன் மூலம் திருவள்ளூர் ,சென்னை ,காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், நாகப்பட்டினம் ,திருவாரூர் ,தஞ்சாவூர், புதுக்கோட்டை ,ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி ,கன்னியாகுமரி ஆகிய பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் பயனடைவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.