#JUSTIN ஓபிஎஸ் கோரிக்கை மனு நிராகரிப்பு!

 
tn

அதிமுக பொதுக்குழுவுக்கு அனுமதி தரக்கூடாது என ஆவடி காவல் ஆணையருக்கு கட்சி ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் நேற்று அளித்த கோரிக்கை மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.

அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் நாளை சென்னை வானகரத்தில் நடைபெற உள்ளது.  அதிமுகவுக்குள் ஒற்றை  தலைமை என்ற கோரிக்கை வலுத்துள்ளது . இதனால் எடப்பாடி பழனிசாமியின் கை ஓங்கியுள்ளது. ஓ பன்னீர்செல்வத்திற்கான  ஆதரவு கட்சியில் குறைந்துள்ளது.

admk office

இந்த சூழலில் அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் நாளை நடைபெற உள்ள நிலையில் கூட்டத்தை ஒத்திவைக்க வேண்டும் என ஓ .பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் எழுதியிருந்தார்.  ஆனால் கூட்டத்தை ஒத்திவைக்க எடப்பாடி பழனிசாமி தரப்பு மறுத்து விட்டது . இதனால் பொதுக்குழு கூட்டத்திற்கு அனுமதி வழங்கக்கூடாது என ஓ.  பன்னீர்செல்வம் காவல் துறைக்கு கோரிக்கை விடுத்திருந்தார். இதுதொடர்பாக அவர் ஆவடி காவல் ஆணையருக்கு ஆணையரிடம் மனு ஒன்றை அளித்திருந்தார்.

admk

இந்நிலையில்  தனியார் இடத்தில் கூட்டம் நடைபெற உள்ளதால் அதற்கு தடை விதிக்க முடியாது என காவல்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. பொதுக்குழு கூட்டம் உள்அரங்கத்தில் நடைபெறுவதால் தடைவிதிக்க முடியாது என்றும் உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல் படி கூட்டத்திற்கு பாதுகாப்பு வழங்கப்படும் என்றும் காவல் ஆணையர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.