சற்று இறக்கம் காட்டிய தங்கம் விலை.. எவ்வளவு குறைந்திருக்கு தெரியுமா??

 
gold


சென்னையில் இன்று தங்கம் விலை அதிரடியாக சவரனுக்கு ரூ. 280 குறைந்துள்ளது.  

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை  கடந்த 2ம் தேதி அதிரடியாக 40 ஆயிரத்தை தாண்டி விற்பனையானது.  தொடர்ந்து  கடந்த வார இறுதியில் குறைந்த நிலையில், வாரத்தின் தொடக்க நாளான நேற்று  மீண்டும் அதிகரித்தது. அதன்படி, நேற்று  தங்கம் விலை மீண்டும் உயர்ந்து, 22 காரட் ஆபரணத் தங்கம்  கிராம்   ரூ.5,045 ஆகவும், சவரனுக்கு 232 ரூபாய் அதிகரித்து, ஒரு சவரன்   40 ஆயிரத்து 360 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.   

தங்கம் விலை

அதேபோல்   வெள்ளி விலையும்   கிராம் ஒன்றுக்கு 90 காசு உயர்ந்து,  ரூ.72.50 ஆகவும்,  கிலோவுக்கு ரூ.900 அதிகரித்து, ரூ.72,500 ஆகவும் விற்பனை செய்யப்பட்டு வந்தது.  இந்நிலையில் இன்று சென்னையில் ஆபரணத் தங்கம் விலை அதிரடியாக சவரனுக்கு ரூ. 280 சரிந்துள்ளது.   

அதாவது 22 கேரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு 35 ரூபாய் குறைந்து, ஒரு கிராம்  ரூ. 5,010க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் ஒரு சவரன் ஆபரணத்தங்கம் ரூ.40,80க்கு விற்பனையாகிறது.  மேலும், வெள்ளி விலை  1 ரூபாய் 70 காசுகள் குறைந்து  ஒரு கிராம் ரூ. 70.80 காசுகளுக்கு விற்பனையாகிறது.  ஒரு கிலோ வெள்ளி 1,700 ரூபாய் குறைந்து  ரூ.70,800க்கு விற்பனையாகிறது.