அதிரடியாக சவரனுக்கு ரூ.320 குறைந்த தங்கம் விலை..
சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை அதிரடியாக சவரனுக்கு ரூ320 குறைந்துள்ளது.
தங்கம் விலை அவ்வப்போது எதிர்பாராத வகையில் ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருவது வழக்கமான ஒன்றுதான்.. ஆனால் அண்மைக்காலமாக ஒரு நாள் தங்கம் விலை அதிரடி மாற்றங்களை சந்தித்து வருகிறது. ஒரு நாள் தங்கத்தின் விலை குறைக்கப்பட்டாலும், அடுத்தடுத்த நாட்களில் அதிகளவில் உயர்த்தப்படுகிறது. ஜூன் மாதம் இறுதியில் தொடர்ந்து சரிவை சந்தித்து சவரன் ரூ. 30 ஆயிரத்திற்கும் கீழ் விற்பனையாகி வந்த நிலையில், இம்மாத ( ஜூலை) தொடக்கத்திலே தங்கம் விலை சவரனுக்கு ரூ.856 உயர்ந்து, சவரன் ரூ.38,280 -க்கு விற்பனை செய்யப்பட்டது. தொடர்ந்து அடுத்த நாளே ( ஜூன் 2) தங்க விலை சவரனுக்கு ரூ.38,336 ஆக அதிகரித்தது. இந்த விலையேற்றம் நகைப்பிரியர்கள் மற்றும் இல்லத்தரசிகளிடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில், இவ்வார முதல் நாளான திங்கள்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு அதிரடியாக ரூ.72 குறைந்து ஒரு சவரன் 37,440 ரூபாய்க்கு அடுத்தடுத்த நாட்களில் கனிசமாக குறைந்து வந்த நிலையில் இன்று மீண்டும் தங்கம் விலை சவரனுக்கு 320 ரூபாய் குறைந்திருக்கிறது. அதன்படி சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கம் ரூ.37,088-க்கும், ஒரு கிராம் ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ.40 குறைந்து ரூ.4,636-க்கும் விற்பனையாகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளியின் விலை 1 ரூபாய் 90 காசுகள் குறைந்து, ஒரு கிராம் ரூ.60.40-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.60,400-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.