முன்கூட்டிய தொடங்கியது தென்மேற்கு பருவமழை!!

 
Rain

தென்மேற்கு பருவமழைக் காலம் முன்கூட்டிய தொடங்கியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் தென்மேற்கு பருவமழை ஜூன் மாதம் தொடங்கி செப்டம்பர் மாதம் முடியும் . இந்த நான்கு மாதங்களில்  பொழியும் மழையை நம்பி தான் இந்திய விவசாயிகள் இருக்கிறார்கள்.
அந்த வகையில் அந்தமான் நிக்கோபர் தீவுகளில் தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கியுள்ளது. இதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழை பெய்து வருகிறது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

rain

தென்மேற்கு பருவமழையானது நேற்று தெற்கு வங்கக்கடல் அந்தமான் கடலில் அந்தமான் நிக்கோபர் தீவுகளில் தொடங்கியுள்ளது.  இது மேலும் வலுப்பெற்று ஒட்டுமொத்த அந்தமான் நிக்கோபர் பகுதி ,வங்கக்கடலில் கிழக்கு , மத்திய பகுதிகளில் அடுத்த இரண்டு மூன்று தினங்களில் சாதகமான சூழலை உருவாக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  தென்மேற்கு பருவமழை யானது ஜூன் 1க்கு பதிலாக முன்கூட்டியே மே 27ம் தேதி கேரளாவில் பெய்யக்கூடும் என்றும் அசானி  புயலின் எச்சங்கள் ஏற்படுத்திய தாக்கத்தினால் இது சாதகமான சூழலை உருவாக்கியுள்ளது என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

rain

வட மாநிலங்கள் மத்திய இந்தியப் பகுதிகளில் கூடுதலான மழை பெய்ய வாய்ப்புள்ளது . இமாலய மலை அடிவாரம், வடமேற்கு இந்தியாவில் இதே நிலையில் இருக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது, வடகிழக்கு வடமேற்கு தென்பகுதி இயல்பை விட குறைவான அளவிலேயே இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.