படப்பை குணா மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

 
gஉ

 புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ரவுடி படப்பை குணா மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.  

 காஞ்சிபுரம் மாவட்டத்தில் பிரபல ரவுடியாக வலம் வந்த படப்பை குணா மீது கொலை, கொள்ளை, ஆள்கடத்தல், அடிதடி என்று பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.     குணா மற்றும் அவரது கூட்டாளிகள் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள தொழில் அதிபர்களையும், தொழிற்சாலைகளையும் மிரட்டி பணம் வசூலில் ஈடுபட்டு வந்ததாக தொடர்ந்து புகார்கள் வந்துகொண்டே இருக்க,  இதை கட்டுப்படுத்த என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் ஏடிஎஸ்பி வெள்ளத்துரையை தமிழக அரசு நியமித்தது.

ன

 வெள்ளை துரையின் நியமனத்திற்கு பிறகு அவர் தீவிர நடவடிக்கை எடுத்து காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள ரவுடிகளை தொடர்ந்து கைது செய்து வந்தார்.    இதில் முக்கிய ரவுடியான படப்பை குணாவை தேடி வந்த போது என்கவுண்டருக்கு பயந்து தலைமறைவாக இருந்து வந்தார்.  இதுயடுத்து படப்பை குணாவுக்கு ஆதரவாக செயல்பட்ட பலரையும் கைது செய்து வெள்ளத்துரை அதிரடி காட்ட ,  அந்த நிலையில் சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் தானாக முன்வந்து சரணடைந்தார் படப்பை குணா.    இதையடுத்து காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல ஆண்டுகளாக அரசு நிலங்களை ஆக்கிரமித்து பல கோடி ரூபாய் மதிப்பிலான நிலங்களையும் மீட்டுள்ளனர்.   குணாவின் கூட்டாளிகளையும் கைது செய்து நடவடிக்கை தொடர்ந்து வருகிறது போலீஸ்.

இந்த நிலையில் நீதிமன்றத்தில் சரணடைந்த குணா தற்போது சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் நிலையில்,   காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி உத்தரவையடுத்து,  காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர் அறிவுறுத்தலின் பேரில் படப்பை குணா மீது குண்டர் சட்டம் பாய்ந்திருக்கிறது.