தமிழ்நாடு என்கின்ற பெயருக்கு மிகப்பெரிய வரலாறு உண்டு - ஆளுநர் தமிழிசை கருத்து!!

 
Tamilisai

ஆளுநர்களை வம்புக்கு இழுப்பது தற்போது அதிகரித்துள்ளதாக தமிழிசை சௌந்தரராஜன் கருத்து தெரிவித்துள்ளார்.

தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் சென்னை சாலிகிராமத்தில் உள்ள தனது இல்லத்தில் பொங்கல் பண்டிகையை இன்று கொண்டாடினார். பாரம்பரிய முறைப்படி மண்பானையில் பொங்கல் வைத்து அனைவரும் பொங்கலோ பொங்கல் என்று முழக்கங்களை எழுப்ப பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டது.

Tamilisai

இந்நிலையில் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் , முதல்வர் விமர்சிக்க வேண்டாம் என்று கூறியும் தமிழ்நாடு ஆளுநரை இணையதளங்களில் தவறாக விமர்சிக்கிறார்கள்.  சிறிய கருத்து வேறுபாடு இருந்தாலும் , நாகரிகத்தோடு வரம்பு மீறாமல் விமர்சனம் செய்ய வேண்டும்.  ஒருவரை ஒருவர் அவதூறாக விமர்சிப்பதை தவிர்க்க வேண்டும்.  தமிழக சட்டமன்றத்தில் நடந்த நிகழ்வுகள் குறித்து கருத்து பேச விரும்பவில்லை.  ஆளுநரை விமர்சித்து அவதூறு பேசுவதை கட்சியினர் தவிர்த்துக் கொள்ள வேண்டும். ஒத்த கருத்துடன் எல்லோரும் செயல்பட முடியாது; ஆக்கபூர்வமான விமர்சனங்களை முன்வையுங்கள். தமிழகம், தமிழ்நாடு இரண்டு வார்த்தைகளுமே முக்கியம். இரண்டையுமே தொடர்ந்து பயன்படுத்தியுள்ளோம். 

tamilisai

ஆளுநர்களை வம்புக்கு இழுப்பது தற்போது அதிகரித்துள்ளது. கருத்து வேற்றுமைகள் இருக்கலாம்; ஆனால் சட்டமன்ற கூட்டத்தொடர் ஆளுநர் உரையோடு தொடங்க வேண்டும் என்பதுதான் மரபு.  தமிழ்நாடு என்கின்ற பெயருக்கு மிகப்பெரிய வரலாறு உண்டு.  இதை அறிவித்த காமராஜருக்கு பெருமை உண்டு.  அதை சட்டமாக்கிய அண்ணாவுக்கும் பெருமை உண்டு.  அதை தமிழர்களாக காப்பாற்ற வேண்டியது நமது கையில் தான் உள்ளது.  ஒரு கருத்தை சொன்னால் அந்த கருத்தை நாகரீகமாக எதிர்கொள்ள வேண்டும்.  பொங்கல் எப்படி இனிமையாக உள்ளது. அதேபோல இணையதளங்களில் வார்த்தைகள் இனிமையாக இருக்க வேண்டும்" என்றார்.