11ம் தேதி அதிமுக பொதுக்குழு நடைபெற வாய்ப்பே இல்லை - வைத்திலிங்கம் திட்டவட்டம்!!

 
vaithilingam admk

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் பூதாகரமாகியுள்ள நிலையில் கடந்த 23ஆம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் சென்னை மாநகரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் கூடியது.  அக்கூட்டத்தில்  பொதுக்குழு தீர்மானங்கள் நிராகரிக்கப்பட்டு மீண்டும் அதிமுக பொதுக்குழு ஜூலை 11ஆம் தேதி கூடும் என்று அறிவித்தார்கள்.ஆனால்  ஒருங்கிணைப்பாளர் ஒப்புதல் இல்லாமல் பொதுக்குழு கூட்ட முடியாது என்று ஓபிஎஸ் தரப்போ  கூறி வருகிறது.

admk

இந்த சூழலில் அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு ஓரிரு நாட்களில் விசாரணைக்கு வர உள்ள நிலையில் சென்னை பசுமை வழி சாலையில் உள்ள இல்லத்தில் எடப்பாடி பழனிசாமி தனது ஆதரவாளர்களுடன் ஆலோசித்து வருகிறார். அதிமுக நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி மீண்டும் ஆலோசனை மேற்கொண்டு வரும் நிலையில் முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, ஆர்.பி. உதயகுமார் உள்ளிட்டோர் ஆலோசித்து வருகின்றனர். பொதுக்குழுவுக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில் மீண்டும் ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது.

admk office

இந்நிலையில்  அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் இன்று செய்தியாளர்களை சந்தித்த போது, அழைப்பிதழ் அனுப்பி அனைத்து ஏற்பாடுகள் செய்தாலும் 11ம் தேதி அதிமுக பொதுக்குழு நடைபெற வாய்ப்பே இல்லை . தலைமைச் கழகம் அழைப்பு என்ற பெயரில் அதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கு அழைப்பிதழ் அனுப்புவது ஏற்புடையதல்ல.பொருளாளரின் ஒப்புதல் இல்லாமல் தலைமை கழக நிர்வாகிகள் பொதுக்குழு கூட்டத்தை கூட்ட முடியாது என்றார்.தொடர்ந்து பேசிய அவர், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறந்த பிறகு இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டு, பிறகு இணைந்தபோதும் பொருளாளர் பொறுப்பில்தான் தேர்தல் ஆணையம் சின்னம் வழங்கியது. தற்போது இரட்டை தலைமை சர்ச்சை உள்ளதால் பொருளாளருக்குதான் சின்னமும், கட்சியை வழிநடத்தும் அதிகாரமும் உள்ளது" என்றார்.