திருமாவளவன் பிறந்தநாள் - தினகரன், அண்ணாமலை வாழ்த்து

 
tn

திருமாவளவனின் 60ஆவது பிறந்தநாளை முன்னிட்டு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் பலர் வாழ்த்து கூறி வருகின்றனர். 

thiruma

அந்த வகையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி  தினகரன், மணிவிழா காணும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர், அருமை நண்பர் திரு.தொல்.திருமாவளவன் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். நல்ல உடல் நலத்துடன் தமிழ்ச் சமூகத்திற்கு இன்னும் பல்லாண்டு காலம் அவர் பணியாற்ற வேண்டுமென எல்லாம் வல்ல இறையருளைப் பிரார்த்திக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார். 

tn

அதேபோல் மதுரை எம்.பி. சு. வெங்கடேசன் தனது ட்விட்டர் பக்கத்தில் , திருமாவளவன் என்பது பெயர்ச்சொல் அல்ல…சனாதனத்திற்கு எதிரான“வினைச் சொல்”. சனாதனத்துக்கு எதிரான கருத்தியல் போரை எல்லா தளங்களிலும் சமரசம் இன்றி நடத்தி வரும் அன்புத் தோழர் திருமாவளவன் அவர்களுக்கு மணிவிழா வாழ்த்துக்கள் என்று பதிவிட்டுள்ளார். 



தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை,  விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினரான அண்ணன் திரு தொல் திருமாவளவன் அவர்களுக்கு தமிழக பாஜக  சார்பில் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.