திருநீறு, குங்குமம் தயாரிப்பு பணியை அமைச்சர் துவக்கி வைத்தார்!!

 
sekar babu

திருக்கோவில்களில் திருநீறு,  குங்குமம் தயாரித்து வழங்கும் பணியை காணொலி  மூலம் அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார்.

sekar babu

 கடந்த சில ஆண்டுகளாக  திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலுக்கு தேவையான விபூதி பிரசாதங்கள்கோவில் நிர்வாகத்தால் தயார் செய்யப்பட்ட வருகிறது.  தமிழக கோவிலில் தயாரிக்கப்படும் திருநீறு மற்றும் குங்குமம் பிரசாதங்களை தரம் உயர்த்தி மற்ற கோவில்களுக்கும் வழங்க முடிவு செய்யப்பட்டது,  அதன்படி அதற்கான திட்டம் இன்று தொடங்கி வைக்கப்பட்டது.

tn

இந்நிலையில் திருக்கோவில்களில் திருநீறு, குங்குமம் தயாரித்து வழங்கும் பணியை காணொலி  மூலம் அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார். மதுரை,  திருச்சி உள்ளிட்ட எட்டு கோயில்களில் தயாரிக்கப்படும் திருநீறு, குங்குமம் தமிழகத்தின் பிற கோவில்களுக்கு அனுப்பி வைக்கப்படும் திட்டம் இன்று தொடங்கி வைக்கப்பட்டது. திண்டுக்கல், கோவை ,ஈரோடு, திருப்பூர் ,சேலம் மற்றும் தஞ்சை ஆகிய  மாவட்டங்களில் உள்ள கோவில்களுக்கு அனுப்பும் நிகழ்ச்சியை  அமைச்சர் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியின் போது பழனி கோவில் இணை ஆணையர் நடராஜன், உதவி ஆணையர் செந்தில்குமார் ,பழனி நகர மன்ற தலைவர் உமா மகேஸ்வரி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.