"திருவாரூர் மத்திய பல்கலைக்கழக இட ஒதுக்கீட்டுப் பிரச்சனை" - பல்கலைக்கழகத்தின் தன்னாட்சி அரசியல் சாசனத்தைவிட மேலானதா?

 
mp

திருவாரூர் பல்கலைக்கழகத்தில் இடஒதுக்கீடு பிரச்சனைக்கு பதிலே இல்லாமல் மத்திய அமைச்சர் சுபாஷ் சர்க்கார் பதில் அளித்துள்ளதாக எம்.பி. சு. வெங்கடேசன் தெரிவித்துள்ளார். 
 

இதுகுறித்து மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் தனது ட்விட்டர் பக்கத்தில், "திருவாரூர் மத்திய பல்கலைக் கழகம் பேராசிரியர் பணி நியமன அறிவிக்கை ஒன்றை 02.12.2021 அன்று வெளியிட்டது. அதில் இட ஒதுக்கீடு காலியிடங்கள் நிரப்பப்படாமல் இருப்பதற்கு ஒரு வினோதமான காரணம் குறிப்பிடப்பட்டு இருந்தது. "போதுமான விண்ணப்பங்கள் வரவில்லை" என்பதே அது. இன்னொரு காரணம் "யாரும் தகுதி பெற்றவர்களாக இல்லை"அது குறித்த கேள்வியை நாடாளுமன்றத்தில் எழுப்பி இருந்தேன். என் கேள்வி 5 பகுதிகளாக இருந்தது. 

su venkatesan

இதற்கு பதில் அளித்துள்ள ஒன்றிய கல்வி இணை அமைச்சர் முனைவர் சுபாஷ் சர்க்கார் நான் கேட்ட ஐந்து கேள்விகளுக்கும் தனித் தனியாக பதில் அளிக்காமல் மொத்தமாக பதில் அளித்துள்ளார். 
அமைச்சர் பதில் அவர் பதில் மத்திய பல்கலைக் கழகங்கள் தனிச் சட்டங்களின் கீழ் உருவாக்கப்பட்ட தன்னாட்சி அமைப்புகள் என்பதால் அவற்றுக்கான பணி நியமனங்களுக்கான அவைகளே வகுத்துக் கொண்டுள்ளன என்றும், 2019 இல் விடுக்கப்பட்ட அறிவிக்கையில் மொத்தம் 26 இட ஒதுக்கீடு நிலுவை காலியிடங்கள் இருந்தன என்றும், அவற்றில் 6 காலியிடங்கள் 2019 க்கு முற்பட்டவை என்றும், 20 காலியிடங்கள் 2019 இல் எழுந்தவை என்றும், அவற்றுக்கான போதுமான விண்ணப்பங்கள் இல்லாததால் நிறைய இடங்களை நிரப்ப முடியவில்லை என்றும், கோவிட் உள்ளிட்ட காரணங்களால் தேர்வு முறைமை தாமதமாகி இரண்டு ஆண்டுகள் ஆகி விட்டது என்றும், 6 மாதங்களுக்குள் பணி நியமனங்களை முடிக்க வேண்டும் என்ற விதி முறைகள் இல்லாததால் அந்த தேர்வுகள் முழுமை அடையாத நிலையில் ரத்து செய்யப்பட்டது என்றும், நேர்காணல்கள்  நடத்தப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார். 

tn

இட ஒதுக்கீடு மறுப்பே
இந்த பதில் உண்மையை மறைக்கிறது.  ஒன்று அமைச்சர் ஐந்து பகுதி கேள்விகளுக்கும் மொத்தமாக பதில் அளிப்பது நாடாளுமன்ற நெறிகளுக்கு முரணானது. இப்படி அவியல் வைப்பது குறிப்பான பதில்களை தவிர்ப்பதற்கே ஆகும். நாடாளுமன்ற நெறிகள் தெளிவாக இப்படி பதில்கள் அமையக் கூடாது என்று தெளிவாக சொல்கின்றன. (மக்களவை செயலகம், கேள்வி பிரிவு வழி காட்டல்கள்/ 08.07.2021, பக்கம் 3, பகுதி 
இரண்டாவது மத்திய பல்கலைக் கழகங்கள் தன்னாட்சி பெற்றவை என்று கை கழுவுவது போல அமைச்சர் வார்த்தைகள் இருக்கின்றன. இட ஒதுக்கீடு என்பது அரசியல் சாசனம் உறுதி செய்து இருக்கிற உரிமை. அதை மத்திய பல்கலைக் கழகங்கள் முறையாக அமலாக்குகின்றனவா? என்பதை யார் கண்காணிப்பது? அவற்றின் நியமன முறைகள் சமூக நீதிக்கு எதிராக இருந்தால் யார் அதை சரி செய்வது? அரசின் பொறுப்பல்லவா? மத்திய பல்கலைக் கழகத்தின் தன்னாட்சி அரசியல் சாசனத்தை விட மேலானதா? 


மூன்றாவது, நான் கேள்வி "சி" யில் மிகத் தெளிவாக "போதுமான விண்ணப்பங்கள் இல்லாமல்" (Inadequate applications) நிரப்பப்படாத காலி இடங்கள் குறித்த விவரங்களை கேட்டேன். எந்த துறை, எந்த பதவி, எவ்வளவு விண்ணப்பங்கள் வந்தன, எவ்வளவு இருந்தால் போதுமானது என்று தெரிவிக்க வேண்டாமா?  கேள்வி (டி) க்கும் பதில் இல்லை. தகுதி பெற்ற விண்ணப்பதாரர்கள் இருந்தாலும், விண்ணப்பங்கள் போதுமான அளவில் இல்லாவிட்டால் அவர்களை பரிசீலிக்க மாட்டோம் என்று கதவடைப்பது என்ன நியாயம்! இவையே நிலுவைக் காலியிடங்கள், 2019 க்கும் முந்தைய காலத்தவை என்றால் இப்போதும் இப்படி காரணங்களால் நிரப்பப்படாது என்றால் எப்போதுதான் நிரம்பும்? வேறு சில துறைகளில், நிறுவனங்களில் காலி இடங்களுக்கு தகுதி பெற்றவர்கள்   இல்லாவிட்டால் தகுதி வரம்புகளே தளர்த்தப்படுகின்றன. அதைக் கூட இங்கே கேட்கவில்லை. இங்கே தகுதி இருந்தாலும், அவர்களின் தரப்பில் எந்த தகுதி இன்மை இல்லாவிட்டாலும் நிராகரிப்பேன் என்றால் எப்படி ஏற்பது? சட்டம் கொடுத்தாலும் நாங்கள் வைத்ததுதான் சட்டம் என்கிறதா திருவாரூர் மத்தியப் பல்கலைக் கழகம்! 

கேள்வி (இ) க்கும் பதில் இல்லை. விண்ணப்பங்கள் போதுமான அளவில் இருந்தும் "ஒருவரும் தகுதி பெறவில்லை" (None found eligible) என்று நிரப்பப்படாத நிலைமையை கண்காணிக்க, பரிசோதிக்க ஏதாவது முறைமை உண்டா? என்றால் அதுவும் அவியல் பதிலுக்குள் காணாமலே போய் விட்டது. விண்ணப்பங்கள் இருந்தாலும் போதுமான அளவில் இல்லை என்று தேர்வு முறையே நடக்காது. அதை மீறி விண்ணப்பங்கள் வந்திருந்தாலும் "யாருமே தேறவில்லை" என்று நிரப்ப மாட்டோம் என்றால் இப்போது நீங்கள் வெளியிட்டு இருக்கும் அறிவிக்கை நீதி தரும் என்று எப்படி நம்புவது?  இப்பிரச்சனையில் உரிய பதில், உரிய நியாயம் கிடைக்கும் வரை என்னுடைய முயற்சிகள் தொடரும்" என்று குறிப்பிட்டுள்ளார்.