இதுதான் சரியான நேரம்.. அதிரடியாக குறைந்த தங்கம் விலை..

 
தங்கம் விலை சரிவு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை அதிரடியாக சவரனுக்கு ரூ.520 குறைந்து விற்பனையாகிறது.  

இன்றைய தங்கம் மற்றும் வெள்ளியின் காலை நேர விலை நிலவரம்

தங்கம் விலை  அவ்வப்போது எதிர்பாராத வகையில் ஏற்ற இறக்கங்களை சந்தித்து  வருவது வழக்கமான ஒன்றுதான்..  ஆனால் அண்மைக்காலமாக  ஒரு நாள் தங்கம் விலை  அதிரடி மாற்றங்களை சந்தித்து வருகிறது.   ஒரு நாள்  தங்கத்தின் விலை குறைக்கப்பட்டாலும், அடுத்தடுத்த  நாட்களில்  அதிகளவில் உயர்த்தப்படுகிறது.   ஜூன் மாதம் இறுதியில் தொடர்ந்து சரிவை சந்தித்து சவரன் ரூ. 30 ஆயிரத்திற்கும் கீழ் விற்பனையாகி வந்த நிலையில்,  இம்மாத ( ஜூலை)  தொடக்கத்திலே தங்கம் விலை சவரனுக்கு ரூ.856 உயர்ந்து, சவரன் ரூ.38,280 -க்கு விற்பனை செய்யப்பட்டது.  தொடர்ந்து அடுத்த நாளே ( ஜூன் 2) தங்க விலை சவரனுக்கு ரூ.38,336 ஆக அதிகரித்தது. இந்த விலையேற்றம் நகைப்பிரியர்கள் மற்றும் இல்லத்தரசிகளிடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியது.

 இன்றைய தங்கம் மற்றும் வெள்ளியின் காலை நேர விலை நிலவரம்
 பின்னர் கடந்த திங்கள் கிழமை அன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு அதிரடியாக  144 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன்  38,480 ரூபாய்க்கும் நேற்று ஆபரணத்  ரூ.56 உயர்ந்து, சவரனுக்கு ரூ.38,440-க்கும் விற்பனையானது. ஆனால், இன்று தங்கம்  விலை சற்றும் எதிர்பார்க்காத வகையில்  அதிரடியாக  ரூ. 520 குறைந்துள்ளது.  அதன்படி சென்னையில் இன்று  கிராமுக்கு ரூ.65 குறைந்து ,  ஒரு கிராம் ஆபரணத் தங்கம் (22 கேரட்) விலை  ரூ.4,740-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.  சவரனுக்கு ரூ.520 குறைந்து  8 கிராம் கொண்ட ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.37,920-க்கு விற்பனையாகிறது.  அதேபோல்  இன்று  சென்னையில்  வெள்ளி விலையும் குறைந்திருக்கிறது. அதன்படி சில்லறை வர்த்தகத்தில் வெள்ளியின் விலை  ரூ.2 குறைந்து,  ஒரு கிராம் ரூ.62.50 -க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.62,500-க்கும் விற்கப்படுகிறது.