#BREAKING துப்பாக்கிச்சூடு சம்பவம் - 4 அதிகாரிகள் சஸ்பெண்ட்

 
dgp sylendra babu dgp sylendra babu

துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக   4 அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். 

tn

தூத்துக்குடியில் இயங்கி வந்த ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கடந்த 2018 ஆம் ஆண்டு மே மாதம் 22 ஆம் தேதி மக்கள் போராட்டம் நடத்தினர்.  இந்த போராட்டம் வன்முறையாக வெடித்த நிலையில் காவல்துறையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர்.  தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து விசாரிப்பதற்காக உயர்நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை குழு ஒன்று அமைக்கப்பட்டது. 3000 பக்கங்கள் கொண்ட தனது அறிக்கையை நீதிபதி அருணா ஜெகதீசன் கடந்த மே 18ஆம் தேதி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் ஒப்படைத்தார்.  தூத்துக்குடி துப்பாக்கி சூடு தொடர்பாகவும்,  எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாகவும் பரிந்துரைகள் இதில் இடம் பெற்றிருந்தன. 

gun

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் போலீசார் வரம்புகளை மீது செயல்பட்டுள்ளனர் என்றும் காவல்துறை தலைமையின் அப்பட்டமான தோல்வி என்பது போராட்டத்தை மாவட்ட ஆட்சியர் மிக அலட்சியமாக அணுகியுள்ளார் என்றும் குற்றசாட்டுகள் வைக்கப்பட்டுள்ளது.   டிஐஜி கபில்குமார் ,  எஸ்.பி. மகேந்திரன், துணை எஸ்பி லிங்கத் திருமாறன், ஆய்வாளர்கள் திருமலை ,ஹரிஹரன் ,பார்த்திபன், துணை ஆய்வாளர்கள் சொர்ணமணி ,ரெனென்ஸ் ,முதல் நிலை காவலர்கள் சங்கர் ,சுடலை கண்ணு, சதீஷ்குமார் , கண்ணன் , இரண்டாம் நிலை காவலர்கள் ராஜா ,தாண்டவமூர்த்தி, காவலர் மதிவாணன் உட்பட 17 போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆணையம் பரிந்துரைத்துள்ளது.

suspend

இந்நிலையில் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தின்போது காவல் ஆய்வாளராக இருந்த திருமலை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.  நெல்லை சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு உதவி ஆணையராக திருமலை தற்போது பணியாற்றி வருகிறார். அத்துடன் சுடலைகண்ணு, சங்கர், சதீஷ் ஆகிய காவலர்களும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். அருணா ஜெகதீசன் விசாரணை ஆணைய அறிக்கை எதிரொலியாக டிஜிபி சைலேந்திர பாபு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார் .