ஆந்திராவில் இருந்து சந்தன கட்டைகளை கடத்தி வந்த 3 பேர் கைது

 
Sandalwood Sandalwood

திருவள்ளூர் அருகே ஆந்திராவில் இருந்து  காரில் கடத்திவரப்பட்ட 3 லட்சம் மதிப்புள்ள  75 கிலோ சந்தன கட்டைகளை பறிமுதல் செய்த போலீசார் 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

ஆந்திராவில் இருந்து சென்னைக்கு திருவள்ளூர் வழியாக காரில் சந்தன கட்டைகள் கடத்தி வரப்படுவதாக திருவள்ளூர் மாவட் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமாரின் தொலைபேசி எண்ணுக்கு வந்த ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் கவரப்பேட்டை பகுதியில் போலிசார்  வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஆந்திராவில் இருந்து சென்னை நோக்கி வந்த காரை மடக்கி சோதனை செய்ததில் சிறுசிறு அட்டைப் பெட்டிகள் இருப்பது கண்டறியப்பட்டது. அதனை தொடர்ந்து அட்டைப் பெட்டிகளை பிரித்துப் பார்த்தபோது அதற்குள் சிறு சிறு துண்டுகளாக சுமார்  3 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 75 கிலோ சந்தன கட்டைகள் இருப்பது கண்டறியப்பட்டது.

sandalwood

இதைத்தொடர்ந்து சந்தன கட்டைகளை பறிமுதல் செய்த போலீசார், 3 பேரையும் கைது செய்ததோடு அவர்களிடமிருந்து ஒன்றரை லட்சம் ரூபாய் ரொக்கம் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய காரை பறிமுதல் செய்தனர். மேலும் கடத்தல் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணையில் சந்தன கட்டைகளை கடத்தி வந்தது,  கர்நாடக மாநிலம் மைசூர் பகுதியை சேர்ந்த நசிர் அகமத்(25), அர்பாஸ்(25) மற்றும் கொல்கத்தாவை சேர்ந்த ஷாபர் அலி(39) என்பது தெரியவந்தது. ஆந்திராவில் இருந்து சந்தன மரக்கட்டைகளை சென்னை பெரியமேடு பகுதிக்கு எடுத்துச் செல்வதாகவும் தெரிவித்துள்ளனர். இதனை தொடரிந்து இந்த சந்தனமரம் யாருக்காக எடுத்து  செல்லப்பட்டது என்ற் கோணத்தில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.