தெய்வங்கள் எல்லாம் தோற்றே போக்கும் தந்தையின் அன்பின் முன்னே! இன்று உலக தந்தையர் தினம்

 
fathers

பிள்ளைகளின் நலனை நெஞ்சில் சுமந்து, அவர்களின் ஆயிரமாயிரம் ஆசைகளுக்கும், கனவுகளுக்கும் உயிர் கொடுக்க ஓடிக் கொண்டிருக்கும் அப்பாக்களுக்கான  தினம் இன்று!

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 3வது ஞாயிற்றுக்கிழமை 'உலக தந்தையர் தினம்' ஆக கொண்டாடப்படுகிறது.  தந்தையர்களின் உழைப்பு, அர்ப்பணிப்பு, தியாகம் உள்ளிட்டவைகளை பாராட்டி அவர்களுக்கு அன்பு செலுத்தவே 'தந்தையர் தினம்' கொண்டாடப்படுகிறது. உலகில் முதல் முறையாக தந்தையர் தினம் 1910ம் ஆண்டு ஜூன் 19 ஆம் தேதி  கொண்டாடப்பட்டது. சில நாடுகளில் தந்தையர் தினம் கொண்டாடப்படும் தேதி மாறுபடும். கத்தோலிக்க நாடுகளில்  தந்தையர் தினம் மே 19 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.   ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் ஃபிஜியில் செப்டம்பர் மாதத்தின் முதல் ஞாயிற்றுக் கிழமை அன்று தந்தையர் தினம் கொண்டாடப்படுகிறது.தாய்லாந்தில் தந்தையர் தினம் மன்னர் புமிபல் பிறந்த நாள் அன்று கொண்டாடப்படுகிறது.  

fathers

தனது தந்தையை கொண்டாட நினைத்த பெண் ஒருவர் தான் தந்தையர் தினத்தை தோற்றுவித்தவர் ஆவார். அமெரிக்காவில் தான் முதல் முறையாக தந்தையர் தினம் கொண்டாடப்பட்டதாக கூறப்படுகிறது. தந்தையர் தினத்தை தோற்றுவித்தவரின் பெயர் சொனாரா ஸ்மார்ட் டாட் ஆகும்.  அன்னையர் தினத்தை கொண்டாடிய அவர்,   தந்தையர் தினமும் கொண்டாடப்பட வேண்டும் என எண்ணினார். இவரின் தாய் ஆறு குழந்தைகளை பெற்றெடுத்து உயிரிழந்த நிலையில், அதன் பின் ஆறு குழந்தைகளை அவரது தந்தை தான் வளர்த்தெடுத்துள்ளார். இதனால் தனது தந்தை மீதான பாசத்தை வெளிப்ப்டுத்த முடிவு செய்த அவர், தந்தையர் தினத்தை கொண்டாட முடிவு செய்துள்ளார். அதன்படி அவர் முதன் முதலாக ஜூன் மாதத்தின் 3வது ஞாயிற்றுக்கிழமை தனது தந்தைக்கு, தந்தையர் தினத்தை கொண்டாடியுள்ளார். அன்று தொட்டு இன்று வரை தந்தையர் தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. 

தியாகங்கள் பல செய்து, குழந்தைகளின் உயர்வுக்கான ஏணியாகத் திகழும் அனைவருக்கும் தந்தையர் தின வாழ்த்துக்கள்