இன்றைய தங்கம் , வெள்ளி விலை நிலவரம்.. சவரனுக்கு ரூ.160 குறைந்தது தங்கம்..

 
gold

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரணுக்கு 160 ரூபாய் குறைந்து ரூ.38,368 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் !

ரஷ்யா - உக்ரைன் போர்ச்சூழல் காரணமாக கடந்த பிப்ரவரி மாதம்  இறுதியில் இருந்தே தங்கம் விலை உயரத்தொடங்கியது.  தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே இருக்கும் எனவும், நிபுணர்கள் தெரிவித்து வந்தனர்.  அதேபோல் மார்ச் மாத தொடக்கத்தில் ஒரு சவரண் 40 ஆயிரத்தை தாண்டி, இல்லத்தரசிகளை அதிர்ச்சிக்கு ஆளாக்கியது. பின்னர் ஒரு நாள் உயர்வதும், மறுநாள் குறைவதுமாக இருந்து வந்தது.  ஆனால் கடந்த வாரத்தில் தொடர்ந்து உயர்வை சந்தித்து வந்த தங்கம் விலை இன்று சற்று இறக்கம் கண்டுள்ளது.

வெள்ளி

நேற்று சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் கிராம் 4,816 ரூபாய்க்கும், ஒரு சவரன் ரூ.38,528 க்கும் விற்பனையானது. இந்நிலையில் இன்று கிராமுக்கு 20 ரூபாய் குறைந்து, ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.4,796க்கு விற்கப்படுகிறது. அதேபோல் சவரனுக்கு 160 ரூபாய் குறைந்து, ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.38,368 க்கு விற்பனை செய்யப்படுகிறது.  இதேபோல் வெள்ளி விலையும் குறைந்திருக்கிறது. நேற்று ஒரு கிராம் வெள்ளி 72 ரூபாய் 70 காசுகளுக்கு விற்பனையான நிலையில் இன்று 40 காசுகள் குறைந்துள்ளது. அதன்படி இன்று 72 ரூபாய் 30 காசுகளுக்கு ஒரு கிராம் வெள்ளி விற்கப்படுகிறது. ஒரு கிலோ ரூ.72,300 க்கு விற்பனையாகிறது.