சென்னையில் அமலுக்கு வந்தது சுங்கக்கட்டணம் உயர்வு.. வாகன ஓட்டிகள் அவதி..

 
 சென்னையில் அமலுக்கு வந்தது சுங்கக்கட்டணம் உயர்வு.. வாகன ஓட்டிகள் அவதி..

ஓஎம்ஆர் சாலையில் அமைந்துள்ள நாவலூர் சுங்கச்சாவடியில் சுங்க கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.  முதல் இந்தக் கட்டன உயர்வு இன்று முதல் (  ஜூலை 1 )  அமலுக்கு வருகிறது.

சென்னை பழைய மகாபலிபுரம் சாலையில் 1999-ம் ஆண்டுக்கு பிறகு பன்னாட்டு நிறுவனங்கள் பெருகின. சென்னையின் ஐடி ஹப்பாக மாறிய பழைய மகாபலிபுரம் சாலை, 2008-ம் ஆண்டு ‘ஐடி எக்ஸ்பிரஸ் வே’ வாக மாறியது. மத்திய கைலாஷில் இருந்து சோழிங்கநல்லூர் வழியாக சிறுசேரி வரை 20 புள்ளி 1 கிலோமீட்டர் தூரத்திற்கு சர்வீஸ் சாலையுடன் கூடிய 4 வழிப் பாதை அமைக்கப்பட்டது. ஓஎம்ஆர் சாலை என்று அழைக்கப்படும் ராஜீவ் காந்தி தகவல் தொழில் நுட்ப விரைவு சாலையில்  அமைந்துள்ள நாவலூர் சுங்கச்சாவடியில்  2036 ஆம் ஆண்டு வரை சுங்க கட்டணம் வசூலிக்கவும்,   ஆண்டுதோறும், ஜூலை மாதத்தில்  சுங்கக்கட்டத்தை உயர்த்திக் கொள்ளவும் அரசு அனுமதி அளித்திருக்கிறது. அதன்படி தற்போது சுங்கக்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

 சுங்கச்சாவடி கட்டணம்!

அதன்படி புதிய கட்டணமாக , “மூன்று சக்கர வாகனங்கள் ஒரு முறை பயணிக்க 11 ரூபாயும், ஒரு முறை சென்று   திரும்ப ரூ. 22 , ஒரு நாள் முழுவதும் பல முறை பயணிக்க ரூ. 37, மாதம் முழுவதும் பயணம் செய்வதற்கான பயண அட்டை  ரூ. 345  ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  கார் மற்றும் ஜீப் போன்ற இலகுரக  வாகனங்கள் ஒரு முறை பயணிக்க ரூ. 33 ஆகவும், ஒரு முறை சென்ற திரும்ப 66 ரூபாயும், ஒரு நாள் முழுவதும் பல முறை பயணிக்க 110 ரூபாயும், மாதம் முழுவதும் பயணம் செய்வதற்கான பயண அட்டை ரூ.   2,650 ரூபாய் ஆகவும்  உயர்த்தப்பட்டுள்ளது.   இலகுரக வணிக வாகனங்களுக்கு   ஒரு முறை பயணிக்க 54 ரூபாயும், ஒரு முறை சென்று  திரும்ப ரூ.108ம், ஒரு நாள் முழுவதும் பல முறை பயணிக்க 150 ரூபாயும், மாதம் முழுவதும் பயணம் செய்வதற்கான பயண அட்டை ரூ.3,365 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

  சுங்கச்சாவடி  கட்டணங்களும் உயர்ந்தது!
அதேபோல்  பேருந்துகள் ஒரு முறை பயணிக்க ரூ.86 ம், ஒரு முறை சென்ற திரும்ப 170 ரூபாயும், ஒரு நாள் முழுவதும் பல முறை பயணிக்க  ரூ. 255 ம், மாதம் முழுவதும் பயணம் செய்வதற்கான பயண அட்டை ரூ.5,570  ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  உள்ளுர் வாகனங்கள் மாதம் முழுவதும் பயணிக்க காருக்கு 350 ரூபாய், இலகு ரகு வாகனங்களுக்கு 400 ரூபாய், டிரக்குகள் மற்றும் பல அச்சு வாகனங்களுக்கு ரூ. 1,100  கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.” இந்த புதிய சுங்க கட்டண உயர்வு இன்று ( ஜூலை 1ம் தேதி )  முதல் அமலுக்கு வந்துள்ளது.