20,000 விவசாயிகளுக்கு பாரம்பரிய நெல் ரகங்கள் ; 200 இளைஞர்களுக்கு தலா ₹1 லட்சம் கடனுதவி!!

 
tn

2022 -23 ஆம் ஆண்டிற்கான வேளாண் பட்ஜெட் இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பட்ஜெட் தாக்கல் செய்து பேசிய அவர், 2021-22ம் ஆண்டில் 53.50 லட்சம் ஏக்கராக நெல் சாகுபடி உயர்ந்துள்ளது; மாவட்ட வாரியாக விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்னைகள் உயர்மட்ட குழு மூலம் தீர்க்கப்பட்டு வருகிறது46 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நெல் சாகுபடி நடக்கிறது; 20,000 விவசாயிகளுக்கு ஓராண்டில் ₹5 கோடி மதிப்பில் தார்ப்பாய்கள் வழங்கப்பட்டுள்ளன  குறுவை சாகுபடியில் அதிகளவில் விவசாயிகள் பயனடைந்துள்ளனர்; தமிழ்நாட்டில் தட்டுப்பாடு இன்றி உரம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்  என்றார். 

tn

இதோ வேளாண் பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள்:-

இயற்கை வேளாண்மை விளைபொருள் ஏற்றுமதி, புதிய கண்டுபிடிப்பு ஆகியவற்றில் சிறந்து விளங்கும் விவசாயிகளை அரசு தொடர்ந்து ஊக்குவித்து பரிசு அளிக்கும்.

வேளாண்துறையில் சிறந்து விளங்கும் விவசாயிகளுக்கு இனி சிறப்பு பரிசு தொகுப்பு வழங்கப்படும்.

20,000 விவசாயிகளுக்கு பாரம்பரிய நெல் ரகங்கள் வழங்கப்படும்.

இயற்கை வேளாண்மையில் ஆர்வமுள்ள விவசாயிகளை ஊக்குவிப்பதற்காக நம்மாழ்வார் இயற்கை ஆராய்ச்சி மையம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

govt

வேளாண் சார்ந்த தொழில் தொடங்க முதற்கட்டமாக 200 இளைஞர்களுக்கு தலா ₹1 லட்சம் கடனுதவி வழங்கப்படும். 

இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்க ரூ.400 கோடி ஒதுக்கீடு.

30,000 மெட்ரிக் டன் அளவில் நெல் பயிர் வகைகள், எண்ணெய் வித்துக்கள் உற்பத்தி செய்யப்பட்டு விவசாயிகளுக்கு வழங்கப்படும்.

2020-2021ம் ஆண்டுக்கு பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் 9.26 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.2,055 கோடி இழப்பீடாக வழங்கப்பட்டுள்ளது.

குறுவை சாகுபடி திட்டத்தால் 46 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு விவசாயிகள் பயன் பெற்றுள்ளனர்.

agri

சிறுதானியங்கள், எண்ணெய் விதைகள் உற்பத்தியை அதிகரிக்க சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்படும்.

3204 கிராம பஞ்சாயத்துகளில் ₹300 கோடி மாநில அரசின் நிதியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம் செயல்படுத்தப்படும்.

உழவர்களை கைப்பிடித்து வளர்ச்சிக்கு அழைத்துச்செல்ல ஊரகவளர்ச்சி துறையுடன் இணைந்து வேளாண்துறை பாடுபடும். 

இயற்கை வேளாண்மை விளைபொருள் ஏற்றுமதி, புதிய கண்டுபிடிப்பு ஆகியவற்றில் சிறந்து விளங்கும் விவசாயிகளை அரசு தொடர்ந்து ஊக்குவித்து பரிசு அளிக்கும்.