வேலூர் தேர்தலில் வெற்றிபெற்று சாதித்த திருநங்கை கங்கா

 
tn

வேலூர் மாநகராட்சியில் 37வது வார்டில் திமுக வேட்பாளர் திருநங்கை கங்கா நாயக் வெற்றி பெற்றுள்ளார்.

tn

தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகள் என மொத்தம் 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. காலை 7 மணிமுதல் மாலை 6 மணிவரை தேர்தல் நடைபெற்ற நிலையில் 60.70 சதவீத வாக்குகள் பதிவானது.  நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் தமிழகம் முழுவதும் 268 மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு மத்தியில் எண்ணப்பட்டு வருகின்றன. வாக்கு எண்ணிக்கை எந்தவித பிரச்சினையும் இல்லாமல்  அமைதியாக நடைபெற்று வருகிறது.

tn

பெரும்பாலான இடங்களில் திமுக கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது. சென்னை மாநகராட்சியில் உள்ள 200 வார்டுகளில் 50 வார்டுகளில் திமுக முன்னணி வகிக்கிறது. இந்நிலையில் வேலூர் மாநகராட்சியில் மொத்தம் 60 வார்டுகள் உள்ளது. இதில் 11 வார்டுகளில் திமுக முன்னிலையில் உள்ளது. 37 வது வார்டினை  பொருத்தவரை திமுக வேட்பாளராக களமிறக்கப்பட்ட திருநங்கை கங்கா நாயக் வெற்றி பெற்றுள்ளார்.  வெற்றி பெற்ற திருநங்கை கங்காவுக்கு சக திருநங்கைகள் தங்களது வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்ததுடன் ஆரத்தி எடுத்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.