தமிழ்நாட்டில் புதிதாக 9 ரயில் வழித்தடங்கள்... ரூ.1000 கோடி ஒதுக்கியது மத்திய அரசு!

 
தெற்கு ரயில்வே

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் கடந்த பிப்ரவரி 1ஆம் தேதி மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட் கலவையான விமர்சனத்தைப் பெற்றுள்ளது. முதலாளிகள், தொழிலதிபர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றாலும் ஏழை, நடுத்தர மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. உதாரணமாக ஏழைகள், நடுத்தர மக்கள் வாங்கும் குடைகளுக்கு வரி உயர்வு, பணக்காரர்கள் வாங்கும் வைரத்திற்கு வரி குறைப்பா என விமர்சனமும் எழுந்துள்ளது. இது யாருக்கான பட்ஜெட்? ஏழைகளுக்காக பணக்காரர்களுக்கா என நெட்டிசன்கள் கேள்வியெழுப்பியுள்ளனர்.

இது ஒருபுறமிருக்க ரயில்வே துறைக்கான நிதி ஒதுக்கீட்டில் தமிழ்நாட்டிற்கு ரூ.1000 கோடி மட்டுமே மத்திய அரசு ஒதுக்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மத்திய பட்ஜெட்டில் ரயில்வே துறைக்கு மொத்தம் ரூ.1.4 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதில் தென்னக ரயில்வேக்காக ரூ.7,114 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக அகல பாதை திட்டங்களுக்காக ரூ.346.80 கோடி, சுரங்கப்பாதை மற்றும் மேம்பாலம் அமைக்க ரூ.464 கோடி, இரட்டை பாதை திட்டங்களுக்கு ரூ.381.51 கோடி தண்டவாளங்களை புதுப்பிக்க ரூ.1,470 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இயக்கப்பட உள்ள 10 சிறப்பு ரயில்கள்: தெற்கு ரயில்வே அறிவிப்பு

தென்னிந்தியாவின் 11 புதிய ரயில் பாதைகளை அமைக்கும் திட்டமும் இதில் அடங்கும். கேரளாவில் திருநின்னவாயா-குருவாயூர் (35 கி.மீ), அங்கமாலி- சபரிமலை (116 கி.மீ) ஆகிய இரண்டு திட்டங்களும், தமிழ்நாட்டில் திண்டிவனம்-செஞ்சி-திருவண்ணாமலை (70 கி.மீ), திண்டிவனம்-நகரி (179.2 கி.மீ), அத்திப்பட்டு-புத்தூர் (88.30கி.மீ), ஈரோடு-பழனி (91.05 கி.மீ), சென்னை-கடலூர் (179.28 கி.மீ), மதுரை-தூத்துக்குடி (143.5 கி.மீ), ஸ்ரீபெரும்புதூர் -கூடுவாஞ்சேரி (60 கி.மீ), மொரப்பூர்-தருமபுரி (36 கி.மீ) என மொத்தம் 10 புதிய ரயில் வழித்தடங்களுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 

தெற்கு ரயில்வே புதிய கால அட்டவணை : சென்னை-மதுரை பிரிவில் ரயில்களின் பயண  நேரம் குறையும்- Dinamani

அதேபோல 11ஆவது திட்டமாக ராமேஷ்வரம் – தனுஷ்கோடி புதிய பாதை திட்டத்திற்கும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்திற்கு மட்டும் ரூ.59 கோடி ஒதுக்கீடு செய்துள்ள மத்திய அரசு, மற்ற புதிய ரயில் பாதை திட்டத்திற்கு மொத்தமாக ரூ.1,000 கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்துள்ளது.