5 சுங்கச்சாவடிகளை அகற்ற மத்திய அமைச்சர் நிதின் கட்கரியிடம் வலியுறுத்தல்.. - எ.வ.வேலு தகவல்..

 
5 சுங்கச்சாவடிகளை அகற்ற மத்திய அமைச்சர் நிதின் கட்கரியிடம் வலியுறுத்தல்.. - எ.வெ.வேலு தகவல்..


பரனூர் உள்ளிட்ட 5 சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும் என மத்திய அரசிடம் வலியுறுத்தியதாக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.

டெல்லியில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரியை தமிழ்நாடு பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு   சந்தித்துப் பேசினார்.   அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் வேலு,  மத்திய அமைச்சர்களை சந்தித்து 10 திட்டங்கள் குறித்து வலியுறுத்தியதாக கூறினார்.  அதில், பரனூர் உள்ளிட்ட  மாநகராட்சி பகுதியில் உள்ள 5 சுங்கச்சாவடிகளை அகற்ற மத்திய அமைச்சர் நிதின் கட்கரியிடம் கோரிக்கை வைத்துள்ளதாக தெரிவித்தார்.

ஸ்பீடா போனதற்கு நானே அபராதம் கட்டி இருக்கேன்.. நிதின் கட்கரி தகவல்

 8 சாலைகளை நெடுஞ்சாலைகளாக தரம் உயர்த்த கோரிக்கை வைத்ததாக  அமைச்சர்  எ.வ.வேலு கூறினார். மேலும்  மதுரவாயல்-ஸ்ரீபெரும்புதூர்  சுங்கச்சாவரி வரை உயர்மட்ட சாலை அமைப்பது ,  சென்னை - செங்கல்பட்டு 8 வழிச்சாலையை திண்டிவனம் வரை நீட்டிக்கவும்,  மாதவரம் சந்திப்பு - சென்னை வெளிவட்டச் சாலையை 6 வழிச் சாலையாக மாற்ற வேண்டும், திருச்சி - துவாக்குடி சாலை நெருக்கமாக இருப்பதால் அங்கு  உயர்மட்ட சாலை  அமைப்பது ஆகிய கோரிக்கைகளை முன்வைத்ததாக குறிப்பிட்டார்.

5 சுங்கச்சாவடிகளை அகற்ற மத்திய அமைச்சர் நிதின் கட்கரியிடம் வலியுறுத்தல்.. - எ.வெ.வேலு தகவல்..

அத்துடன் ,  தாம்பரம் - செங்கல்பட்டு  பரனூர் சுங்கச்சவடி வரை உயர்மட்ட சாலை அமைப்பது,  கோவை - சத்தியமங்கலம் தேசிய நெடுஞ்சாலையை 6 வழிச்சாலையாக மாற்றவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாக கூறிய அமைச்சர் எ.வ.வேலு  , சாலை திட்டங்களுக்கு நாங்கள் ( திமுக அரசு ) முழுமையான ஒத்துழைப்பு கொடுப்பதாகவும்,  முன்னதக  இருந்த அரசுதான் எந்த ஒத்துழைப்பும் கொடுக்கவில்லை என்றும் கூறினார்.