‘செயலால் வாரிசு என்ற வசை கழியுங்கள்’ - உதயநிதிக்கு வைரமுத்து வாழ்த்து..

 
  ‘செயலால் வாரிசு என்ற வசை கழியுங்கள்’ - உதயநிதிக்கு வைரமுத்து வாழ்த்து..


‘செயலால் வாரிசு என்கிற வசை கழியுங்கள்’என புதிதாக அமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்ட உதயநிதி ஸ்டாலினுக்கு கவிஞர் வைரமுத்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.  

தமிழக அமைச்சரவையில் 35வது அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் இன்று பொறுப்பேற்றுக்கொண்டார்.  திமுக இளைஞரணி செயலாளரும்,  சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் இன்று சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில் அமைச்சராக பதவி ஏற்றார்.  அவருக்கு தமிழக ஆளுநர் ஆர். என். ரவி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.  அவருக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை  ஒதுக்கப்பட்டுள்ளது.  இதனையடுத்து அமைச்சர்  அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர்கள், ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்டோர் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

tn

அதேபோல் கவிஞர் வைரமுத்தும் வாழ்த்துக்களை தெரிவித்திருக்கிறார்.  வழக்கமான தனது கவிதை பாணியில் ட்விட்டரில் வாழ்த்து கூறியிருக்கிறார். அவரது பதிவில், “உள்ளங்கவர் உதயநிதி!

கலைஞர் குடும்பம்
உங்களுக்குத் தந்தது
அறிமுகம் மட்டும்தான்

இன்னொரு முகம் இருக்கிறது;
அறிவு முகம்;
செயலால் மட்டுமே அடைவது

உங்கள் செயலால்
வாரிசு என்ற
வசை கழியுங்கள்

தளபதி மகனே வருக
தமிழர்க்கு மேன்மை தருக

அமைச்சர் உதயநிதிக்கு
வாழ்த்துக்கள்”  என்று குறிப்பிட்டுள்ளார்.