வெண்ணிலா கபடி குழு நடிகர் ஹரி வைரவன் காலமானார்

 
ஹ்

வெண்ணிலா கபடி குழு திரைப்படத்தில் நடித்த ஹரி வைரவன் உடல்நலக்குறைவினால்  காலமானார்.  கடந்த சில மாதங்களாகவே உடல்நிலை சரியில்லாமல் இருந்த ஹரி வைரவன் இன்று காலையில் உயிரிழந்தார்.

வ்

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஹரி வைரவனின் மனைவி, தன் கணவர் கோமா நிலைக்கு  சென்றுவிட்டார் என்றும், சிகிச்சைக்குப் பின்னர்  வீட்டில் இருக்கிறார்.  சர்க்கரை நோய், அதிக உடல் எடையினால் பாதிக்கப்பட்டிருக்கிறார் என்று சொல்லி மருத்துவ செலவுகளுக்கு உதவி கோரியிருந்தார்.  நடிகர்கள் பிளாக் பாண்டி, கார்த்திக், சரவணா உள்ளிட்டோர் உதவி செய்து வந்தார்கள்.

வ

பல மாதங்களாக உடல் நல பிரச்சனையால் பாதிக்கப்பட்டிருந்த ஹரி வைரவன் இன்று அதிகாலையில் 12.15 மணிக்கு காலமானார்.  அவரது சொந்த ஊரான மதுரை மாவட்டம் கடச்சனேந்தல் கிராமத்தில் இன்று மாலை 4.30 மணிக்கு நல்லடக்கம் செயப்படுகிறது.