வேளச்சேரி எம்.எல்.ஏ. ரிசார்ட்டில் போதை விருந்து - 100க்கும் மேற்பட்டோர் சிறைபிடிப்பு

 
ECR

சென்னை வேளச்சேரி எம்எல்ஏவுக்கு சொந்தமான ECR ரிசார்ட்டில் போதை விருந்து நடந்ததாக எழுந்த புகாரில், 50 பெண்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  

சென்னை கிழக்கு கடற்கரை சாலை பணையூரில் வேளச்சேரி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ஹசன் மௌலானாவிற்க்கு சொந்தமான ரிசார்ட் உள்ளது. இந்த விடுதியில் இசை நிகழ்ச்சி மற்றும் போதை விருந்து நடந்து வருவதாக தாம்பரம் காவல் ஆணையருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. ரகசிய தகவலை அடுத்து தாம்பரம் காவல் ஆணையர் ரவி உத்தரவின் பேரில் மது விலக்கு போலீசார் மற்றும் சட்டம் ஒழுங்கு போலீசார் அங்கு சோதனை செய்ததில் பல கோடி ரூபாய் மதிப்பிலான தடைசெய்யப்பட்ட  விலையுர்ந்த கொக்கைன், கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் மற்றும் வெளிநாட்டு மதுபானங்கள், வெளிநாட்டு சிகரெட்டுகள் உள்ளிட்டவற்றை போலீசார் பறிமுதல் செய்யப்பட்டது. 

ecr

இந்த போதை விருந்தில் 100 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு  ஆடல் பாடல் நிகழ்ச்சி நடத்தியது தெரிய வந்துள்ளது. குறிப்பாக இந்த போதை விருந்தில் 50 க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு ஆபாச நடனம் ஆடியதாக தகவல் வெளியாகியுள்ளது. இசை நிகழ்ச்சி மற்றும் போதை விருந்தில் கலந்து கொண்ட 50 பெண்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோரின் பெயர் மற்றும் முகவரிகளை சேகரித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.