"மிக விரைவில் 79 புதிய மருத்துவமனைகள் பயன்பாட்டுக்கு வரவுள்ளது" - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

 
ma subramanian

மிக விரைவில் 79 புதிய மருத்துவமனைகள் மக்களின் பயன்பாட்டுக்கு வரவுள்ளது என்று  அமைச்சர் மா.சுப்பிரமணியன்  தெரிவித்துள்ளார். 

மாநில அளவிலான மழைக்கால நோய்கள் மற்றும் டெங்கு தடுப்பு பணிகள் குறித்த கலந்தாய்வு கூட்டம் சென்னை ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனையில்  நடைபெற்றது. இதில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், நகர்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என். நேரு, ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

ma Subramanian

இந்நிலையில்  இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்,  தடுப்பூசி போடும் பணியை ஒரு இயக்கமாகவே மாற்றியுள்ளோம்.  தமிழகத்தில் 95.96 சதவீதம் முதல் தவணை தடுப்பூசியும் , 89.44 சதவீதம் பேர் இரண்டாவது தவணை தடுப்பூசியையும் செலுத்தி கொண்டுள்ளனர்.  டெங்கு, டைபாயிடு , மலேரியா போன்ற நோய்களால் 2017இல் தான் அதிகப்படியானவர்கள் பாதிக்கப்பட்டு 65 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  கடந்த ஆண்டு மே மாதம் மட்டும் 10,136 பேர் தமிழகத்தில் மரணமடைந்துள்ளனர்.  85 மக்களை தேடி  மருத்துவம் திட்டத்தின் மூலம் பயன்பெற்றுள்ளனர். 

ஒன்றைரை  லட்சம் பேர் இன்னுயிர் காப்பகம் திட்டத்தின் மூலம் பயன்படுத்தியுள்ளார்கள்.  25 ஆரம்ப சுகாதார நிலையம்,  25 சுகாதார நிலையம் என மொத்தம் 50 சுகாதார நிலையம் அமைய உள்ளன.  இதற்கான அறிவிப்பை விரைவில் தமிழக முதல்வர் வெளியிடுவார்.  தமிழகத்தில் 79 புதிய மருத்துவமனைகள் கட்ட வேண்டும் என்று முதலமைச்சராக அறிவித்திருந்தார்.   தற்போது அறுபதுக்கு மேற்பட்ட மருத்துவமனைகள் கட்டும் பணிகள் நிறைவு பெற்றுள்ளது. மிக விரைவில் தமிழகத்தில் 79 புதிய மருத்துவமனைகள் பயன்பாட்டுக்கு வரவுள்ளது. 

Ma Subramanian

கொசு மருந்து அடிப்பது,  புகை மருந்து அடிப்பது உள்ள பணிகளை 365 நாட்களும் செயல்படவில்லை என்றாலும் கூட மழைக்காலங்களில் இது போன்ற பணியை தமிழக அரசு செய்து வருகிறது.  தென்மேற்கு பருவமழை , வடகிழக்கு பருவமழை விவசாயத்திலும் போது ஏற்படக்கூடிய மழை என அனைத்துமே சிறப்பாக வந்து கொண்டிருக்கிறது.  2017 ஏற்பட்ட டெங்கு பாதிப்பை போன்று இனி எப்போதும் டெங்கு பாதிப்பு ஏற்படக்கூடாது.  2017 தான் தமிழகத்திற்கு ஏற்பட்ட கரும்புள்ளி என்றார்.