#BREAKING தமிழ்நாட்டில் 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தொழிற்கல்வி பாடம் ரத்து!

 
dpi

 தமிழ்நாட்டில் 9ஆம்  வகுப்பு மாணவர்களுக்கான தொழிற்கல்வி பாடம் ரத்து செய்யப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. 

schools open

தமிழகத்தில் கடந்த 2018ஆம் ஆண்டு 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விருப்பப்பாடமாக தொழிற்கல்வி பாடம் அறிமுகப்படுத்தப்பட்டது.  மாணவர்கள் தங்களது பாடத்திட்டத்தில் திறன் சார்ந்த கல்வியை பெறும் வகையில் கடந்த 2018 ஆம் ஆண்டு 67 அரசு மேல்நிலைப்பள்ளிகளில்,  ரூ.3.55 கோடியில் தொழிற்கல்வி திட்டம் செயல்படுத்த தமிழக அரசு அறிவித்து அதற்கான அரசாணை வெளியிட்டது. தானியங்கி ஊர்திப் பொறியியல், மின்னணு வன்பொருள் ,வீட்டு அலங்காரம் செய்தல், விவசாயம் ,அழகியல் நிபுணர், சுகாதாரம் ஆகிய பாடங்கள் இதில் அறிமுகப்படுத்தப்பட்டன.

govt

இந்நிலையில் தமிழ்நாட்டில் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தொழிற்கல்வி  பாடம் ரத்து செய்யப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது . அதிமுக ஆட்சியில் 9 மற்றும் 10ஆம் வகுப்புகளுக்கு தொழிற்கல்வி பாடத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு தொழிற்கல்வி பாடத் திட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் , நடப்பாண்டில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டுமே தொழிற்கல்வி  பாடத்திட்டம் செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.