#JUSTIN இல்லம் தேடி மருத்துவம் பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு ; பேறுகால விடுப்பு!!

 
masu

இல்லம் தேடி மருத்துவம்  பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு  அளிக்கப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்துள்ளார்.

masu

திமுக அரசு பொறுப்பேற்று பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து வரும் நிலையில் மக்களை தேடி மருத்துவம் என்ற திட்டத்தை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தொடங்கி வைத்தார்.  பொதுமக்களுக்கு நேரடியாக சென்று மருத்துவ சேவைகள் வழங்குவது இத்திட்டத்தின் பிரதான நோக்கமாக அமைந்தது.  இதில் சுகாதார ஆய்வாளர்கள் , கிராம செவிலியர்கள்,  தன்னார்வலர்கள் போன்றோர் தங்களை ஈடுபடுத்திக் கொண்டு சிறப்பாக பணியாற்றினர்.  அதேபோல் இன்னுயிர் காப்போம் திட்டம் ஆகியவை மூலம் சாலை பாதுகாப்பு தொடர்பாகவும், சாலை விபத்துகளை குறைப்பது தொடர்பாகவும் முடிவெடுக்கப்பட்டு , முதல் 48 மணி நேர அவசர சிகிச்சைக்கான செலவை அரசு மேற்கொள்ளும் எனவும் அறிவிக்கப்பட்டது.

Masu

இந்நிலையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த போது , தேசிய நல்வாழ்வு குழுமத்தில் பணிபுரியும் ஒப்பந்த பெண் ஊழியர்களுக்கு 6 மாதம் பேறுகால விடுப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். தொடர்ந்து பேசியுள்ள அவர்,  தேசிய நல்வாழ்வு குழுமத்தில் பணிபுரியும் 5,971 ஊழியர்களுக்கு 30% ஊதிய உயர்வு அளிக்கப்படும். 2448 சுகாதார பணியாளர்களுக்கும் 11 ஆயிரத்திலிருந்து 14 ஆயிரமாக ஊதியம் உயர்த்தப்படுகிறது. அதேபோல் இல்லம் தேடி மருத்துவம் திட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய 4,848 செவிலியர்களுக்கு ரூபாய் 18 ஆயிரமாக ஊதியம் உயர்த்தப்படும்.  ஹெல்த்கேர் திட்டத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு ரூபாய் 3 ஆயிரம் ஊதியம் உயர்த்தி வழங்கப்படும்.  ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு புனர்வாழ்வு மையம் அமைக்கப்படும் " என்றார்.