தூய்மைப் பணியாளர்களை வார்டு கவுன்சிலர்கள் மிரட்டுவதை தடுக்க வேண்டும்!!

 
tn

தூய்மைப் பணியாளர்களை வார்டு கவுன்சிலர்கள்  மிரட்டுவதை தடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வலியுறுத்தியுள்ளது.

tn

இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது ட்விட்டர் பக்கத்தில், "பொறியியல் பிரிவுகளில் ஒப்பந்த அடிப்படையில் பணி செய்தவர்களை ஆட்குறைப்பு என்று நிறுத்தப்பட்டுள்ள அனைவருக்கும் மீண்டும் வேலை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைளை வலியுறுத்தி மதுரை மாநகராட்சித் தொழிலாளர் சங்கம் (சிஐடியு), தமிழ்நாடு சுகாதாரப் பணியாளர்கள் முன்னேற்ற சங்கம் மதுரை மாநகராட்சி துப்புரவுத் தொழிலாளர் மேம்பாட்டு தொழிற்சங்க நிர்வாகிகள் ஆகியோர் தலைமையில் மதுரை மாநகராட்சியில் பணிபுரியும் சுகாதாரம் - பொறியியல் பிரிவைச் சேர்ந்த சுமார்  2500 பெண்கள்  உட்பட  6000 தொழிலாளர்கள் 28 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி வேலைநிறுத்தப் போராட்டம். மதுரை மாநகராட்சியில் 2017ம்  ஆண்டுக்குப் பிறகு ஓய்வு பெற்ற சுகாதாரம் மற்றும் பொறியியல் பிரிவு நிரந்தரப் பணியாளர்களுக்கு பணப்பலன்களை உடன் வழங்க வேண்டும்; அனைத்துப் பிரிவுத் தொழிலாளர்களிடம் பிடித்தம் செய்த பி.எப். மற்றும் நிலுவைத் தொகையை வழங்க வேண்டும்; தூய்மைப் பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள் என்ற அடிப்ப டையில் அறிவிக்கப்பட்ட கொரோனா ஊக்கத்தொகை ரூ15,000த்தை வழங்க வேண்டும்; வார்டுகளில் ஒப்பந்தப் பணியாளர்களை, மேற்பார்வையாளர் என்ற போர்வையில் நியமிக்கப்பட்ட கட்சிக்காரர்களை வெளியேற்ற வேண்டும்.

balakrishnan

வார்டுகளில் ஒப்பந்தப் பணியாளர்களை, மேற்பார்வையாளர் என்ற போர்வையில் நியமிக்கப்பட்ட கட்சிக்காரர்களை வெளியேற்ற வேண்டும்;ஒப்பந்த முறையை ரத்து செய்து அனைத்துப் பணிகளையும் மாநகராட்சியே ஏற்று நடத்த வேண்டும்; உயர்நீதிமன்ற உத்தரவுப்படி தினக்கூலி தொழிலாளர்கள் 389 பேரை நிரந்தரம் செய்ய வேண்டும்.



நிரந்தரத் தூய்மைப்  பணியாளர்களுக்கு 7வது ஊதியக்குழு நிலுவைத் தொகையை வழங்க வேண்டும்; தூய்மைப் பணியாளர்களை வார்டு கவுன்சிலர்கள்  மிரட்டுவதைதடுக்க வேண்டும்வார்டு ஊழியர்களை தன்னிச்சையாக வார்டுவிட்டு வார்டு மாற்றம் செய்யக்கூடாது;வார்டு அலுவலகத்தை கவுன்சிலர் அலுவலகமாக மாற்றுவதை தவிர்த்து மாற்றுஇடம் ஏற்பாடு செய்யும் வரைமட்டும் அலுவலகத்தைப் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும்" என்று  வலியுறுத்தியுள்ளது.