நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் மீது திமுகவினர் தாக்குதல்

 
nn

திமுக மற்றும் நாம் தமிழர்கட்சி இடையே தொடர்ந்து மோதல் போக்கு இருந்து வந்தது.   இதையடுத்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மேடையில் செருப்பை கழற்றி தூக்கி காட்டி எச்சரித்த பின்னர் இந்த மோதல் போக்கு அதிகரித்தது.  

அதன்பின்னர்,   நாம் தமிழர் கட்சியின் மேடையிலேயே  திமுக வினர் அராஜகம் செய்து நாற்காலிகளை பிடுங்கி தூர வீசினார்கள்.   இதன் பின்னர் நாம் தமிழர் கட்சியினருக்கும் திமுகவினருக்கும் இடையே போஸ்டர் யுத்தம் நீடித்து வந்தது.

nn

 கடந்த ஒரு மாதமாக இந்த மோதல் போக்கு இல்லாமல் அமைதியாக இருந்து வந்த நிலையில் தற்போது வேட்பு மனு தாக்கலின் போது மீண்டும் நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் மீது திமுகவினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.   நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்ய நேற்று கடைசி நாள் என்பதால் ஏராளமானோர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

 வேலூர் மாநகராட்சியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் உடன் மாவட்ட துணைத்தலைவர் சங்கரும் சென்றிருக்கிறார்.   அப்போது திமுகவினரை மட்டும் அதிக எண்ணிக்கையில் அனுமதிப்பதாக குற்றம்சாட்டப்பட்டிருக்கிறது.

 மேலும் அதிகாரிகள் பாரபட்சமாக நடந்து கொள்வதாக சங்கர் புகார் தெரிவித்திருக்கிறார்.   இதையடுத்து அங்கிருந்த திமுகவினர் அவரை சரமாரியாக தாக்கியுள்ளனர்.    முதலில் கண்டுகொள்ளாமல் இருந்த போலீசார் மோதல் போக்கு ஏற்பட்ட பின்னர் அவர்களை தடுத்து நிறுத்தியதாக தெரிகிறது.

 நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் மீது திமுகவினர் தாக்கிய சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பதற்றம் நிலவியிருக்கிறது.