"நாங்கள் பழப்பெருமைகள் மீது பற்று கொண்டவர்கள் தான்; ஆனால் பழமைவாதிகள் அல்ல" - முதல்வர் ஸ்டாலின்

 
mk stalin mk stalin

நாங்கள் பழப்பெருமைகள் மீது பற்று கொண்டவர்கள் தான்; ஆனால் பழமைவாதிகள் அல்ல என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

mk stalin

சென்னை கிறிஸ்துவ கல்லூரியில் நடந்த  இந்திய வரலாற்று பேரவையின் 81வது மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், "நாங்கள் பழம்பெருமைகள் மீது பற்று கொண்டவர்கள் தான்; ஆனால் பழமைவாதிகள் அல்ல. படிப்புகளால் தான் நிகழ்கால வரலாற்றை படைக்க முடியும். நாட்டை சூழ்ந்துள்ள ஆபத்து வரலாற்று திரிபு தான். பொய்களை புறந்தள்ளி, மக்களை மையப்படுத்துவதாக வரலாறு இருக்க வேண்டும். எந்த கட்சியும், மதவாத கட்சியாக இருக்கக் கூடாது" என்றார்.

mk stalin

தொடர்ந்து பேசிய அவர், "வேற்றுமைகளை, ஏற்றத்தாழ்வுகளை நியாப்படுத்தும் பொய் வரலாறுகளை புறந்தள்ளி, மக்களை மையப்படுத்தி  உண்மையான வரலாறு எழுதப்பட வேண்டும். கற்பனையாக கூறப்படும் வரலாற்றை நம்பி ஏமாந்துவிடக் கூடாது. அறிவியல்பூர்வமான ஆதாரங்களின் அடிப்படையில்தான் எங்கள் வரலாற்று பெருமைகளை பேசுகிறோம்" என்றார்.