#BREAKING "ஜனநாயக கடமையை நிறைவேற்றியுள்ளோம்" - ஓபிஎஸ்

 
ops

அதிமுக விதிகளை கட்டுக்காக்கும் பொறுப்பு எங்களுக்கு இருக்கிறது என்று ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.

op

சட்டப்பேரவை கூட்டத்தொடரின் முதல் நாள் அவை நடவடிக்கைகளுக்கு பிறகு ஓ. பன்னீர்செல்வம் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,  "அதிமுக சார்பில் எங்களுடைய ஜனநாயக கடமையை நிறைவேற்றுவதற்காக இன்றைய கூட்டத்தொடரில் நாங்கள் கலந்து கொண்டோம்.  சட்டமன்ற கூட்டத்தொடர் நடப்பதற்கு முன்பாக பேரவை தலைவரை சந்தித்து விட்டு வந்திருக்கிறோம்.  இன்றைக்கு அலுவல ஆய்வுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானங்களை நாங்கள் முழு மனதோடு ஏற்றுக் கொள்கிறோம்.

OPS

எம்ஜிஆர் தொண்டர்களுக்காகத்தான் அதிமுகவை உருவாக்கி மூன்று முறை முதல்வராக நல்ல பல திட்டங்களை மக்களுக்கு அர்ப்பணித்தார்.  அவரது மறைவுக்கு பின்னால் மறைந்த முதல்வர் ஜெயலலிதா கட்சியின் பொதுச்செயலாளராக பொறுப்பேற்று 30 ஆண்டு காலம் இந்த இயக்கத்திற்கு மிகப்பெரிய வலுவினையும் , தமிழக மக்களின் அன்பையும் ஆதரவையும் பெற்றுள்ளார் .  நாட்டு மக்களுக்கு தேவையான நல்ல திட்டங்களை நிறைவேற்றினார்.  இந்தியாவில் இருக்கும் பிற மாநிலங்களுக்கு எல்லாம் முன்னோடியாக முதல்வராக அவர் பணியாற்றினார்.  அதிமுகவுக்காக தொண்டர்கள்  ரத்தம் சிந்த தொடங்கியது இந்த இயக்கம்.

ops

எம்ஜிஆர் உருவாக்கிய கட்சியின் சட்ட விதி அதனை ஜெயலலிதா கட்டிக் காத்தார்.  எந்த விதமான மாசும் படாமல் காக்கின்ற பணியில் தான் நாங்கள் நின்று கொண்டிருக்கிறோம். எவ்வளவு பிரச்சனைகள் வந்தாலும், அச்சுறுத்தல்கள் வந்தாலும் அதை காட்டிக் அதை கட்டி காப்பாற்றுகின்ற சிப்பாய்களாக தான் ஒன்றரை கோடி தொண்டர்களும் இருக்கிறார்கள்.  எங்களுக்கு தமிழகத்தில் இருக்கின்ற மக்கள் அனைவரும் மிகப்பெரும் ஆதரவை தந்து கொண்டுள்ளனர்.  எம்ஜிஆரை பொறுத்தவரை தொண்டர்கள்தான் இந்த இயக்கத்தின் அடித்தளம்.  ஆணிவேர் தற்போது கட்சியின் சட்ட விதிகள் மாற்றப்படுகின்ற சூழல் அபாயகரமானது.  எனவே இந்த விதிகளின்படி அதிமுக இயக்கம் நடைபெற வேண்டும் என்று நாங்கள் போராடிக் கொண்டிருக்கிறோம் "என்றார்.