"தமிழ்நாட்டில் இனி கஞ்சா இல்லை என்ற நிலையை கஞ்சா வேட்டை 3.0 உறுதி செய்ய வேண்டும்" - ராமதாஸ் வலியுறுத்தல்!!

 
PMK

கஞ்சா விற்பனை குறித்து காவல்துறைக்கு பொதுமக்கள் தகவல் அளிக்க வசதியாக  மூன்று இலக்க இலவச தொலைபேசி  அழைப்பு எண்ணை உருவாக்கி அறிவிக்க வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். 

dgp sylendra babu

தமிழகத்தில் கஞ்சா வேட்டை 3.0 தமிழகம் முழுவதும், கடந்த 12ஆம் தேதி  முதல் தொடங்கப்பட்டது.  கடந்த மூன்று நாள்களில் 403 கஞ்சா வியாபாரிகள் கைது செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து 361 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 15 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. அனைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களும், மாநகர காவல் ஆணையர்களும் கஞ்சா பதுக்கல் மற்றும் விற்பனையில் ஈடுபட்டுள்ள மொத்த வியாபாரிகளின் வங்கிக் கணக்குகளையும், சட்ட விரோதமாக அவர்கள் வாங்கிக் குவித்த சொத்துகளையும் முடக்கி சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அறிக்கை அனுப்புமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இனி வரும் காலங்களில் தமிழ்நாட்டில் கஞ்சா கடத்தும் குற்றச் செயலின் மூலம் சம்பாதிக்கும் அனைத்து சொத்துக்களும் முடக்கப்படும்” எனக் காவல்துறை குறிப்பிட்டுள்ளது. 

தமிழகத்தில் ஆபரேஷன் கஞ்சா வேட்டை: 6,623 பேர் கைது - காவல்துறையினர் அதிரடி |  6,623 arrested by police in Tamil Nadu under 'Operation Cannabis' |  Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News ...

இந்நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் , "தமிழ்நாட்டில் கடந்த 3 நாட்களாக கஞ்சா வேட்டை 3.0 நடைபெற்றுவருவதாகவும், 403 கஞ்சா வணிகர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் காவல்துறை தெரிவித்திருப்பது வரவேற்கத்தக்கது.  எதற்காக இந்த நடவடிக்கையோ,  அந்த இலக்கை  எட்ட உறுதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்! கடந்த ஆண்டு இதே காலத்தில் கஞ்சா வேட்டை 1.0 தொடங்கப்பட்டது. அதன்பின் ஓராண்டாகியும் இன்னும் கஞ்சா ஒழிக்கப்படாதது ஏன்? அதிக எண்ணிக்கையில் கஞ்சா வணிகர்கள் கைதாவது ஏன்? என்பதற்கான காரணங்கள் ஆராயப்பட வேண்டும். அதில் உள்ள குறைகள் களையப்பட வேண்டும்!



கஞ்சா வணிகர்களை மட்டும் கைது செய்வதில் பயனில்லை.  மாநிலங்களைக் கடந்து பரந்து விரிந்து கிடக்கும் கஞ்சா வலைக்கட்டமைப்பின் வேரைக் கண்டறிந்து அகற்ற வேண்டும். கஞ்சா விளைவிக்கப்படும் இடங்களை கண்டறிந்து ஒழிக்க வேண்டும். வெளிமாநிலங்களில் இருந்து கஞ்சா வருவதை தடுக்க வேண்டும்! கஞ்சா விற்றதாக கைதாகி விடுதலையானவர்கள் மீண்டும்  கஞ்சா விற்பது வாடிக்கையாகி விட்டது.  இது தொடர்ந்தால் கஞ்சாவை ஒழிக்க முடியாது.  கஞ்சா விற்றதாக இரண்டாவது முறை கைதாவோருக்கு கடும் தண்டனையும், மூன்றாவது முறை கைதாவோரை குண்டர் சட்டத்திலும் சிறையில் அடைக்க வேண்டும்! தமிழ்நாட்டில் இனி கஞ்சா இல்லை என்ற நிலையை கஞ்சா வேட்டை 3.0 உறுதி செய்ய வேண்டும். கஞ்சா விற்பனை குறித்து காவல்துறைக்கு பொதுமக்கள் தகவல் அளிக்க வசதியாக  மூன்று இலக்க இலவச தொலைபேசி  அழைப்பு எண்ணை உருவாக்கி அறிவிக்க வேண்டும்!" என்று பதிவிட்டுள்ளார்.