சூர்யா மன்னிப்பு கேட்கும் வரை விடமாட்டோம்- பாமக மாணவர் சங்கம் ஆவேசம்

 
eett

 சூர்யா மன்னிப்பு கேட்கும் வரைக்கும் அவரது எதற்கும் துணிந்தவன் படத்தை கடலூர் மாவத்தில் வெளியிடக்கூடாது என்று பாமக மாணவர் சங்கம் சார்பில் கடலூர் மாவட்ட திரையரங்கு உரிமையாளர்களிடம் கோரிக்கை வைக்கப்பட்டிருக்கிறது.  இதனால் கடலூர் மாவட்டத்தில் எதற்கும் துணிந்தவன் படம் திரையிடப்படுமா என்ற கேள்விக்குறி எழுந்திருக்கிறது.

p

 சூர்யா நடித்த ஜெய்பீம் திரைப்படத்தில்  வன்னியர் சமூக மக்களுக்கு எதிரான காட்சிகள் இருந்ததாக சொல்லி அதற்காக சூர்யா மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பாமக சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.   பாமகவினரும் வன்னியர்களும் தொடர்ந்து ஆர்ப்பாட்டங்கள் போராட்டங்கள் நடத்தி வந்தனர். ஆனால், கடைசி வரைக்கும் சூர்யா அந்த விவகாரத்தில் மன்னிப்பு கேட்கவே இல்லை .

இந்தநிலையில் சூர்யா நடித்த எதற்கும் துணிந்தவன் படம் திரைக்கு வருகிறது.   சூர்யா மன்னிப்பு கேட்கும் வரைக்கும் இப்படத்தை கடலூரில் கடலூர் மாவட்டத்தில் திரையிடக்கூடாது என்று கடலூர் மாவட்ட பாமக மாணவர் சங்கம் களமிறங்கி இருக்கிறது.

et

பாமக மாணவர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் விஜயவர்மன் கடலூர் மாவட்ட திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்திடம் அளித்திருக்கும் கடிதத்தில்,   ‘’ நடிகர் சூர்யா நடித்து கடந்த 2001 ஆம் ஆண்டு நவம்பர் 2 ஆம் தேதி வெளியான ஜெய் பீம் திரைப்படம் இருளர் சமுதாய மக்களின் வாழ்க்கையை மையமாக கொண்டுள்ள உண்மை சம்பவ அடிப்படையில் எடுக்கப்பட்ட திரைப்படம்.   அதில் வழக்கறிஞர் சந்துரு அதே பெயரில் இருக்க,  கதாபாத்திரத்தில் வந்த அனைவரும் அதே கதாபாத்திரத்தில் நடிக்க,  போலீஸ் எஸ்ஐ அந்தோணிசாமி என்ற தலித் கிறிஸ்தவர் மட்டும் குருமூர்த்தி என்ற கதாபாத்திரத்தை வன்னியர் ஆக சித்தரிக்கப்பட்டுள்ளது. 

காவல் உதவி ஆய்வாளராக நடித்தவர் ஒரு ஜாதி வெறியர் போல சித்தரித்து வன்னியர்களின் அடையாளமாக அக்கினி கலசத்தை அவர் வீட்டில் காட்சிப்படுத்தி காவல் உதவி ஆய்வாளரை வன்னியர் சமுதாயத்தைச் சார்ந்தவர் என்றும் ஒட்டுமொத்த வன்னிய சமுதாய மக்கள் ஜாதி வழியை வன்மம் உள்ளவர்கள் காட்டியுள்ளனர் . சகோதரத்துவம் உள்ள இருளர் வன்னியர் சமுதாயத்தில் ஜாதி வன்மத்தை தூண்டும் விதமாக இத்திரைப்படம் எடுத்திருப்பது வன்னியர்களை கொச்சைப் படுத்தும் விதமாகவும் வன்முறையாளர்களாக தொடர்ந்து சித்தரித்து வரும் நடிகர் சூர்யாவின் திரைப்படத்தை அவர் வன்னியர் மக்களிடம் பொது மன்னிப்பு கேட்கும் வரை அவரது எதற்கும் துணிந்தவன் படத்தை கடலூர் மாவட்டத்தில் ஒளிபரப்ப அனுமதிக்கக் கூடாது என்று பாமக சார்பாகவும் வன்னியர் சங்கம் சார்பாகவும் கேட்டுக்கொள்கிறேன்’’ என்று தெரிவித்திருக்கிறார்.