அந்த கடிதத்தை நாங்க எழுதல... பதறும் எஸ்.டி.பி.ஐ

 
sd

பொள்ளாச்சியில் 16 இடங்களில் குண்டு வீசப்படும் என்று பொள்ளாச்சி காவல் நிலையத்திற்கு கடிதம் வந்திருந்தது.  பாப்புலர் ப்ரன்ட் ஆப் இந்தியா என்கிற அமைப்பிற்கு மத்திய அரசு தடை விதித்திருக்கும் நிலையில் இந்த கடிதம் வந்திருகிறது. எஸ்.டி.பி.ஐ  பெயரில் இந்த வெளிவந்திருக்கும் இந்த கடித்ததை எஸ்.டி.பி.ஐ மறுத்திருக்கிறது.

பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா அமைப்பு சட்ட விரோதமானது என்று மத்திய அரசு அறிவித்திருக்கிறது .   பி.எப்.ஐ. அமைப்புக்கு பயங்கரவாத இயக்கங்களுடன் தொடர்பு இருக்கிறது என்று அறிவித்துள்ள மத்திய உள்துறை அமைச்சகம்,   ஊபா சட்டத்தின் கீழ் பாப்புலர் ஃப்ரன்ட் ஆப் இந்தியா அமைப்பையும் அதற்கு தொடர்புடைய அமைப்புகளுக்கும் ஐந்து ஆண்டுகள் தடை விதித்து உத்தரவு பிறப்பித்திருக்கிறது. இதை எதிர்த்து அந்த அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

po

இத்தகையை சூழலில்,  பொள்ளாச்சி காவல் ஆய்வாளருக்கு ஒரு கடிதம் வந்திருக்கிறது. அந்த கடிதத்தில், பொள்ளாட்சியில் 16 இடங்களில் பெட்ரோல் குண்டு அல்லது கையெறி குண்டு வீசப்படும் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.  இந்த கடிதத்தை எழுதியது யார் என்பது குறித்த விசாரணையில்  போலீசார் தீவிரமாக உள்ளனர்.
 
இந்த நிலையில்,  எஸ். டி. பி. ஐ கோவை தெற்கு மாவட்ட பொதுச் செயலாளர் இக்பால் தலைமையில் எஸ்டிபிஐ கட்சியினர் கோவை மாவட்ட எஸ்.பி அலுவலகத்திற்கு சென்று மனு அளித்துள்ளனர்.   அந்த மனுவில்,   பொள்ளாச்சி காவல் நிலையத்திற்கு வந்ததாக ஒரு கடிதம் பொள்ளாச்சி காவல்துறை சார்பாக வெளியிடப்பட்டிருக்கிறது. அந்த கடிதத்தில் பொள்ளாச்சி குமரன் நகரில் 16 இடங்களில் பெட்ரோல் குண்டு,  கையெறி குண்டு வீசப்படும் என்றும்,  சட்டம் ஒழுங்கை பாதுகாத்துக் கொள்ளவும் என்றும் எழுதப்பட்டு,  குமரன் நகர் எஸ்டிபிஐ என்று குறிப்பிடப்பட்டு அந்த கடிதம் வெளியிடப்பட்டிருக்கிறது. 

 அந்த கடிதத்திற்கும் எஸ்டிபிஐ கட்சிக்கும் எந்த விதமான தொடர்பும் இல்லை என்று தெரிவித்துக் கொள்வதோடு,  இந்த விஷயத்தில் விசாரணை நடத்தி உண்மையான குற்றவாளிகளை கைது செய்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.