'ஏழையரின் பெருமூச்சை விடவா நீ பெருவீச்சு வீசுவாய்?' - மாண்டஸ் புயல் குறித்து வைரமுத்து கவிதை..

 
 'ஏழையரின் பெருமூச்சை விடவா நீ பெருவீச்சு வீசுவாய்?' -  மாண்டஸ் புயல் குறித்து வைரமுத்து கவிதை.. 


ஏழையரின் பெருமூச்சை விடவா நீ பெருவீச்சு வீசுவாய்? என மாண்டஸ் புயல் குறித்து கவிஞர் வைரமுத்து தனது கவிதை பாணியில் கூறியுள்ளார்.  

வங்கக்கடலில் உருவாகிய மாண்டஸ் புயல் புதுச்சேரிக்கும், ஸ்ரீஹரிகோட்டாவுக்கும் இடையே மாமல்லபுரம் அருகே அதிகாலை 2.30 மணிக்கு இடையே கரையை கடந்தது. அப்போது  மணிக்கு 75 கி.மீ வேகத்தில் சூறாவளிக்காற்று வீசியது.  இதனால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் , திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் சுமார்  400 மின்கம்பங்கள் மற்றும் மரங்கள் வேரோடு சாய்ந்தன. அதுமட்டுமின்றி  4 பேர் உயிரிழந்துள்ளனர்.

பிற்பகலுக்கு மேல் தான் முழுமையான பாதிப்பு விவரங்கள் தெரியவரும் என்று கூறப்படுகிறது.  இந்நிலையில் மாண்டஸ் புயல் குறித்து கவிஞர் வைரமுத்து எழுதிய கவிதை சமூகவலைதளங்களில் வெளியாகியுள்ளது.  

 'ஏழையரின் பெருமூச்சை விடவா நீ பெருவீச்சு வீசுவாய்?' -  மாண்டஸ் புயல் குறித்து வைரமுத்து கவிதை.. 

அந்த கவிதையில், “

போ புயலே போய்விடு..
பச்சைமரம் பெயர்த்துப்
பல் துலக்காமல்,
வேய்ந்தவை பிரித்து
விசிறிக் கொள்ளாமல்,
குழந்தையர் கவர்ந்து
கோலியாடாமல், பாமர
உடல்களைப் பட்டம்
விடாமல், சுகமாய்க்
கடந்துவிடு, சுவாசமாகி விடு
ஏழையரின் பெருமூச்சை விடவா நீ
பெருவீச்சு வீசுவாய்?”- வைரமுத்து..