தமிழகத்தில் சொத்துவரி உயர்வை எதிர்த்து த.மா.கா கண்டன ஆர்ப்பாட்டம்!!

 
tn

தமிழகத்தில் சொத்துவரி உயர்வை எதிர்த்து  22ஆம் தேதி த.மா.கா கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ் மாநில காங்கிரஸ் தலைவரும், எம்.பி.யுமான ஜி.கே. வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழக அரசு சொத்துவரியை 150 % சதவிகிதம் உயர்த்தியது கொரானாவின் தாக்கத்தில் இருந்து மீட்டுவரும் மக்களுக்கு பெரும் சுமையாக அமைந்துள்ளது . 

govt

வரிஉயர்வு நாட்டின் முன்னேற்றதிற்கு வழி வகுக்கும் என்பதில் சந்தேகமில்லை .  ஆனால் அவை மக்களை பாதிக்காதவாறு இருக்க வேண்டும் . பாமரர் முதல் செல்வந்தவர் வரை கொரோனாவின் தாக்கத்தால் பொருளாதார இழப்பில் இருந்து மீண்டெழும் முன்னரே சொத்துவரி உயர்வை அறிவித்து மக்களை அதர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது தமிழக அரசு.

gk

மக்களை சிரமதிற்குள்ளாக்கும் இந்த சொத்து வரி உயர்வை உடனடியாக திரும்ப பெற வலியுறுத்தி வருகிற 22.04.2022 வெள்ளிக்கிழமை காலை 10.00 மணியளவில் நாகர்கோவிலில் அமைந்துள்ள , கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பாக எனது தலைமையில் , கன்னியாகுமரி , திருநெல்வேலி , தென்காசி , தூத்துக்குடி , மாவட்டங்களின் சார்பில் த.மா.காவின் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் . இந்த ஆர்ப்பாட்டத்தில் இயக்க நண்பர்களும் , பொது மக்களும் பெரும்திரளாக கலந்துகொண்டு ஆதரவு தெரிவிக்கும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.